T20 : ஒரு BALL -ல கூட இது நடக்கலயே..!!.. INDvNZ போட்டியில் நடந்த வினோதம்.. Trending

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி 20 தொடர் தற்போது ஆரம்பமாகி உள்ளது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி, ராஞ்சியில் வைத்து நடைபெற்றிருந்தது.

T20 : ஒரு BALL -ல கூட இது நடக்கலயே..!!.. INDvNZ போட்டியில் நடந்த வினோதம்.. Trending

Images are subject to © copyright to their respective owners

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 அவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்திருந்தது. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து, இரு அணிகளுக்கும் இடையேயான 2 ஆவது டி 20 போட்டி 29.01.2023 அன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, ரன்கள் அடிக்க முடியாமல் திணறினர். 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட் இழப்புகளுக்கு வெறும் 99 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து அணி எடுத்திருந்தது. அதிகபட்சமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 19 ரன்கள் எடுத்திருந்தார்.

No sixes in entire match in india vs newzealand second t 20

Images are subject to © copyright to their respective owners

எளிய இலக்கு என்பதால் இந்திய அணி சீக்கிரம் வென்று விடும் என்றே ரசிகர்கள் கருதி வந்தனர். ஆனால் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் மிக கச்சிதமாக செயல்பட்டு, இந்திய அணி வீரர்கள் ரன் அடிக்காமல் பார்த்து கொண்டனர். விக்கெட்டுகள் செல்லாத சூழலிலும் இந்திய அணி ரன் சேர்க்க தடுமாறியது.

இதனால், கடைசி ஓவர் வரை போட்டி செல்ல அந்த ஓவரில் 6 ரன்கள் வேண்டும் என்ற நிலை உருவானது. இதனையடுத்து, ஒரு பந்து மீதம் வைத்து இந்திய அணி வெற்றி பெற்றது. 100 ரன்கள் இலக்கை தொட இந்திய அணி கடைசி ஓவர் வரை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

No sixes in entire match in india vs newzealand second t 20

Images are subject to © copyright to their respective owners

இந்நிலையில் இந்த போட்டியில் நடந்த நம்ப முடியாத விஷயம் தொடர்பான செய்தி தற்போது அதிகம் பேசுபொருளாக மாறி உள்ளது. அதாவது இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து, மொத்தம் 239 பந்துகள் வீசப்பட்டது. ஆனால் இந்த போட்டியில் ஒரு சிக்ஸர்கள் கூட எந்த ஒரு வீரரும் அடிக்கவில்லை. டி20 போட்டியில், அதுவும் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் மோதிய போதும், பல அதிரடி வீரர்கள் அணிகளில் இருந்தும் ஒரு சிக்ஸர் கூட செல்லாதது பலரையும் சற்று அதிர்ச்சியிலும் உறைய வைத்துள்ளது.

No sixes in entire match in india vs newzealand second t 20

Images are subject to © copyright to their respective owners

அதுமட்டுமில்லாமல் சிக்ஸர்கள் இல்லாமல் அதிக பால்கள் வீசப்பட்ட டி 20 போட்டி என்ற ஒரு நம்ப முடியாத சாதனையும் இந்த போட்டி வசமாகி உள்ளது.

IND VS NZ, T 20 MATCH, SIXERS

மற்ற செய்திகள்