அவரு ஆடக்கூடாது... 'காயத்தில்' இருந்து மீண்டு வந்த இளம்வீரருக்கு... 'செக்' வைத்த நபர்... அதிரவைக்கும் காரணம்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 அணி சற்றுமுன் பிசிசிஐ-யால் அறிவிக்கப்பட்டது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம்வீரர் ஹர்திக் பாண்டியா பெயர் இடம்பெறவில்லை. டி20 அணியை அறிவித்த பிசிசிஐ ஹர்திக் பாண்டியாவால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை அறிவிக்காமல் ஒத்தி வைத்துள்ளது.
முன்னதாக ஹர்திக் பாண்டியா உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததால் அவர் நியூசிலாந்து அணிக்கு எதிராக செல்லவிருக்கும் இந்திய ஏ அணியில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்பட்டது. ஆனால் உண்மையில் ஹர்திக்கை இப்போது போட்டிகளில் ஆட வேண்டாம் என்று தடுத்தது அவரது தனிப்பட்ட உடற்பயிற்சி நிபுணர் தானாம். அதேபோல அவருக்கு உடற்தகுதி தேர்வு எதுவும் நடத்தப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்குப்பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் காயத்தால் அவதிப்பட்ட ஹர்திக் பாண்டியா, அறுவைசிகிச்சை மேற்கொண்டு காயத்தில் இருந்து தற்போது மீண்டு வருகிறார். 4 மாதங்களுக்கு மேலாக உடற்தகுதி பயிற்சிகளை மேற்கொண்டு வந்த ஹர்திக் பாண்டியா, நியூசிலாந்து அணியில் இடம்பெறுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் நியூசிலாந்து அணியில் இடம் பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
பாண்டியாவின் உடல்நிலை தற்போது நன்றாக இருந்தாலும் சர்வதேச பந்துவீச்சை தாங்கும் அளவுக்கு அவர் தயாராகவில்லை என்று இதுகுறித்து ரஜினிகாந்த் தெரிவித்து இருக்கிறார். மேலும் ஹர்திக்கிற்கு எந்தவித உடற்தகுதி தேர்வு நடத்தப்படவில்லை என்பதையும் அவர் வெளிப்படுத்தி உள்ளார். ஹர்திக் பாண்டியா உடல்நிலை குறித்து பிசிசிஐ மற்றும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு ரஜினிகாந்த் அனுப்பிய தகவல்கள் அடிப்படையிலேயே அவரை பிசிசிஐ இந்திய ஏ அணியில் சேர்க்கவில்லை என தெரிகிறது.