‘டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடக்காது’... ‘டெல்லி துணை முதல்வர் அறிவிப்பு’... விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் டெல்லியில், ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை நடத்த தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

‘டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடக்காது’... ‘டெல்லி துணை முதல்வர் அறிவிப்பு’... விபரங்கள் உள்ளே!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று மதியம் நிருபர்களை சந்தித்தபோது இந்த தகவல்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது, ‘கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுக்கிறோம். ரசிகர்கள் அதிகம் கூடும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் உள்ளிட்ட எந்த ஒரு விளையாட்டு போட்டிகளையும், டெல்லி அரசு நடத்த அனுமதிக்காது.

நீச்சல் குளங்கள் மூடப்படுகின்றன. ரசிகர்கள் அதிகம் கூடினால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. இதனால் விளையாட்டு நடவடிக்கைகள், கருத்தரங்குகள், மாநாடுகள் இங்கு ஏற்பாடு செய்யப்படாது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் ஒருவருக்கொருவர் இடைவெளியை பராமரிக்க வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.

வரும் மார்ச் 29-ம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்க உள்ள நிலையில், டெல்லி அரசு இவ்வாறு கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.  இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடத்தலாமா வேண்டாமா அல்லது ரசிகர்கள் இன்றி இண்டோரில் நடத்தலாமா என நாளை ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுவதாக இருந்தது. முன்னதாக கொரோனா அச்சுறுத்தலால் வணிக வளாகங்கள், பள்ளிகள், திரையரங்குகள் உள்ளிட்டவைகள் டெல்லியில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

DELHI-DAREDEVILS, IPL, CRICKET, CSK, CORONAVIRUS, DELHI, GOVERNMENT