கிரிக்கெட் உலகையே திரும்பி பாக்க வைத்த அந்த 'ஃபீல்டிங்',,.. அதுக்கு பின்னாடி இருக்குற... வேற லெவல் 'inspiring' ஸ்டோரி!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக, பஞ்சாப் அணி வீரர் நிக்கோலாஸ் பூரன், பவுண்டரி லைனுக்கு அருகே செய்த அசாத்திய ஃபீல்டிங் தான் நேற்றைய டாப் செய்தி.

கிரிக்கெட் உலகையே திரும்பி பாக்க வைத்த அந்த 'ஃபீல்டிங்',,.. அதுக்கு பின்னாடி இருக்குற... வேற லெவல் 'inspiring' ஸ்டோரி!!!

ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றிலே இப்படி ஒரு ஃபீல்டிங்கை நான் பார்த்ததில்லை என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் உட்பட பலர், பூரனின் கேட்சால் மெய்சிலிர்த்து போயினர். இந்தாண்டு பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜோண்ட்டி ரோட்ஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது செயல் தான் இது எனவும் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஆனால், பூரனின் இந்த கேட்சிற்கு பின்னால் மிகப் பெரிய கதை உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிக்கோலாஸ் பூரன், கிரிக்கெட் பயிற்சி முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது கார் விபத்து ஒன்றில் அவர் சிக்கியுள்ளார். இதில், அவரது இரண்டு கால்களில் படுகாயம் ஏற்பட்டு எலும்புகள் முறிந்துள்ளது.

அப்போது, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இனிமேல் நீங்கள் கிரிக்கெட் ஆட முடியாது என்று தெரிவித்தனர். மேலும், சில மாதங்கள் கழித்து நீங்கள் வேண்டுமானால் நடக்கலாம். ஆனால், ஓடவோ தாவவோ முடியாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி மீறி கிரிக்கெட் ஆடினால் உங்களுக்கே அது ஆபத்தாக திரும்பும் எனவும் எச்சரித்துள்ளனர்.

மொத்தம் 18 மாதம் படுத்த படுக்கையில் இருந்த பூரன், 2017 ஆம் ஆண்டில் மெல்ல மெல்ல மீண்டு வந்து உடற்பயிற்சி, சிறப்பான நடைப்பயிற்சி மூலம் தனது கால்களுக்கு பலம் சேர்த்து இருக்கிறார். தொடர்ந்து, தனது கடின முயற்சி மூலம், 2019 ஆம் ஆண்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தேர்வாகி, விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், கிரிக்கெட் உலகில் மிக முக்கியமான ஃபீல்டிங் செய்த நேற்றைய சம்பவம் அதிகம் பேசுப் பொருளாகியுள்ளது. உங்களால் கிரிக்கெட் ஆட முடியாது என மருத்துவர்கள் எச்சரித்த போதும், தன் முன்னிருந்த தடைகளை எல்லாம் தாண்டி இன்று சாதித்தும் காட்டியிருக்கிறார் நிக்கோலாஸ் பூரன்.

மற்ற செய்திகள்