VIDEO : "இந்த மாதிரி ஒரு 'ஃபீல்டிங்' எந்த 'மேட்ச்'லயும் பாத்ததே இல்லடா சாமி..." 'wow' மோடில் 'கிரிக்கெட்' ரசிகர்கள்... இன்னைக்கி இதான் 'ட்ரெண்டிங்' போங்க!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்றைய ஐபிஎல் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயித்த இமாலய இலக்கை எட்டிப் பிடிக்க ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் மிகவும் அதிரடியாக வருகின்றனர்.
பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராஜஸ்தான் அணியும் அதிரடி காட்டி வரும் நிலையில், பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வின் வீசிய பந்தை சிக்ஸர் லைனுக்கு பக்கத்தில் சஞ்சு சாம்சன் அடித்த நிலையில், எல்லைக் கோட்டுக்கு அருகே நின்ற பஞ்சாப் அணியின் நிகோலஸ் பூரன், மிகவும் அற்புதமாக டைவ் அடித்து பந்தை பவுண்டரிக்கு செல்ல விடாமல் தடுத்தார்.
இதனைக் கண்ட ரசிகர்கள், மிகவும் ஆச்சரியத்தில் உறைந்து போயுள்ளனர். காரணம், இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் அற்புதமாக பூரன் ஃபீல்டிங் செய்ததாக அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
பஞ்சாப் அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜோண்ட்டி ரோட்ஸ் இந்தாண்டு நியமிக்கப்பட்ட நிலையில், அவரது அசாத்திய பயிற்சி தான் இது என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். பூரன் மிக சிறப்பாக ஃபீல்டிங் செய்த நிலையில், அவரது பயிற்சியாளரான ஜோண்ட்டி ரோட்ஸ் மைதானத்திற்கு வெளியே இருந்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.
அதே போல, சச்சின் டெண்டுல்கர், சேவாக் ஆகியோரும் இந்த கேட்ச் தொடர்பாக ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளனர்.
#jontyRhodes FIELDING COACH 💥
#POORAN 🙏#KingsXiPunjab pic.twitter.com/FOhmghykgu
— Krishna sai ✊🇮🇳 (@Krishna19348905) September 27, 2020
Gravity naamak cheez hi bhula di. Aisa kaise.
Defied Gravity, Pooran. What a save. pic.twitter.com/1HReADpmVh
— Virender Sehwag (@virendersehwag) September 27, 2020
This is the best save I have seen in my life. Simply incredible!! 👍#IPL2020 #RRvKXIP pic.twitter.com/2r7cNZmUaw
— Sachin Tendulkar (@sachin_rt) September 27, 2020
மற்ற செய்திகள்