இதுமட்டும் நடந்தா முதல் நாளே இந்தியா ‘ஆல் அவுட்’ ஆகிடும்.. நியூஸிலாந்து ஜெயிக்கவே அதிக வாய்ப்பு இருக்கு.. முன்னாள் வீரர் கருத்து..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் பாண்ட் கருத்து தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை (18.06.2021) இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த இறுதிப்போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்தே முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஷேன் பாண்ட்டும் தனது கருத்தை தெரித்துள்ளார்.
இதுகுறித்து தனியார் சேனல் ஒன்றுக்கு ஷேன் பாண்ட் அளித்த பேட்டியில், ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தால், போட்டி ஐந்து நாட்கள் வரை நடைபெறாது. அதுவே இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தால், போட்டி முடிய கொஞ்சம் அதிக நேரம் ஆகும். இந்திய அணிக்கு இருக்கும் ஒரே சாதகமான விஷயம் அவர்களது பந்துவீச்சு மட்டும்தான்’ என அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ஷேன் பாண்ட், ‘இப்போட்டியில் நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீசினால், நிச்சயமாக இந்திய அணி 200 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகிவிடும். நியூஸிலாந்து வீரர்கள் ஏற்கனவே இங்கிலாந்து தொடரில் விளையாடிவிட்டு வந்திருப்பதால் அவர்கள்தான் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய அணி முதல் நாளே ஆல் அவுட் ஆகும் என்றே நான் நினைக்கிறேன்’ என ஷேன் பாண்ட் கருத்து தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்