ஒருவேளை இந்த ‘மாசம்’ ஐபிஎல் மறுபடியும் நடந்தா.. இந்த ‘டாப்’ ப்ளேயர்ஸை நீங்க மிஸ் பண்ணுவீங்க.. வெளியான ‘ஷாக்’ ரிப்போர்ட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்றால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்கப்பட்டால் முக்கிய வீரர்கள் சிலர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் தொடரை தற்காலிகமாக பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது. இந்த தொடரில் விளையாடிய சில வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து போட்டிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது சொந்த நாட்டுக்கு திரும்பியுள்ளனர்.
இதனிடையே மீண்டும் ஐபிஎல் தொடரை தொடங்குவது தொடர்பாக பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக சமீபத்தில் பேசிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, நாடு தற்போது உள்ள நிலையில் இந்தியாவில் மீண்டும் ஐபிஎல் தொடர் நடத்துவது சாத்தியமில்லை என கூறினார். அதனால் கடந்த ஆண்டை போல ஐக்கிய அரபு அமீரகத்தில் எஞ்சிய போட்டிகளை நடத்த ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷுப், மற்ற நாடுகளின் கிரிக்கெட் தொடர்கள் என அடுத்தடுத்து நடைபெற உள்ளன. இதனால் வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் ஐபிஎல் தொடரை நடத்த வாய்ப்புள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார். ஒருவேளை செப்டம்பர் மாதம் நிச்சயமாக ஐபிஎல் தொடர் நடைபெற்றால், நியூஸிலாந்து வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் ஐபிஎல் தொடரும் நடைபெற்றால் நியூஸிலாந்து வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில், கேன் வில்லியம்சன், டிரெண்ட் போல்ட், கைல் ஜேமின்சன், ஜிம்மி நீஷம், லாக்கி பெர்குசன், ஃபின் ஆலன், மிட்செல் சாண்ட்னர், ஆடம் மில்னே, மற்றும் டிம் சிஃபெர்ட் உள்ளிட்ட நியூஸிலாந்து வீரர்கள் விளையாடி வருகின்றனர்.
இதில் கேன் வில்லியம்சன், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார் என்பது குறுப்பிடத்தக்கது. ஒருவேளை செப்டம்பர் மாதம் ஐபிஎல் தொடர் தொடங்கினால், நியூஸிலாந்து வீரர்கள் விளையாட மாட்டார்களா? என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
மற்ற செய்திகள்