இப்படி ஒரு ரன் அவுட்ட எங்கயாவது பாத்ததுண்டா யுவர் ஆனர்.. வைரலாகும் வீடியோ.. பாவம் யா அந்த பேட்ஸ்மேன்
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிரிக்கெட் போட்டிகளில் இதுவரை இல்லாத முறையில், வீரர் ஒருவர் ரன் அவுட்டாகியுள்ளது தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
உலகெங்கிலும் கிரிக்கெட் போட்டிகளைக் காணும் ரசிகர்கள் பட்டாளம் என்பது அதிகம். கிரிக்கெட் போட்டிகளை பார்க்காதவர்கள் கூட, அதில் நடைபெறும் வேடிக்கையான நிகழ்வுகளை நிச்சயம் யூடியூப் போன்ற தளங்களில் பார்த்திருப்பார்கள்.
அந்த அளவுக்கு, கிரிக்கெட் போட்டிகளில் வேடிக்கையாகவோ, அல்லது புதுமையாகவோ ஏதேனும் நிகழ்வு நடந்தால், அது தொடர்பான வீடியோக்களும் வைரலாகும்.
டி 20 போட்டி
இந்நிலையில், தற்போது அப்படி ஒரு வேடிக்கையாக, அதே வேளையில் நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவில், வீரர் ஒருவர் அவுட் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில், ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதைப் போல, பல நாடுகளில் டி 20 லீக் தொடர்கள் நடைபெறுவது வழக்கம். பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, வங்கதேசம் உள்ளிட்ட பல நாடுகளில், டி 20 லீக் தொடர்கள் நடைபெற்று வருகிறது.
பங்களாதேஷ் பிரீமியர் லீக்
இதில், வங்கதேசத்தில் நடைபெற்று வரும் பங்களாதேஷ் பிரீமியர் லீக் டி 20 தொடர் ஒன்றில் தான், வினோதமான முறையில், விக்கெட் ஒன்று விழுந்துள்ளது. குல்னா டைகர்ஸ் மற்றும் மினிஸ்டர் குரூப் டாக்கா ஆகிய அணிகள் போட்டி ஒன்றில் மோதியுள்ளது.
எதிர்பாராமல் நடந்த சம்பவம்
இதில், டாக்கா அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 15 ஆவது ஓவரை இலங்கை வீரர் திசாரா பெராரா வீசினார். அப்போது பந்தை எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசல், அதனை தேர்டு மேன் திசையில் அடித்தார். தொடர்ந்து, வேகமாக ரன் ஓடி எடுக்க முயற்சித்த போது, அந்த பகுதியில் ஃபீல்டிங் நின்ற வீரர், பந்தினை வேகமாக எடுத்து, பேட்டிங் சைடு உள்ள ஸ்டம்பை நோக்கி வீசினார்.
அதில் பந்து பட்ட நிலையில், பேட்ஸ்மேன் கிரீஸுக்குள் சென்று விட்டார். தொடர்ந்து, பேட்ஸ்மேன் சைடு ஸ்டம்பில் பட்ட பந்து, அதே வேகத்துடன் பவுலிங் சைடு இருந்த ஸ்டம்பிலும் போய் பட்டது. ஆனால், அந்த பக்கம், கிரீஸுக்குள் ரசல் செல்லாத நிலையில், அவர் ரன் அவுட்டானார்.
வைரல் வீடியோ
பேட்டிங் திசையில் பந்தினை ஃபீல்டர் வீசியதால், மெதுவாக நடந்த ரசல், யாரும் எதிர்பார்க்காத வகையில் ரன் அவுட்டானார். இது தொடர்பான வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில், இணையவாசிகள் பல விதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்