IPL2023: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையா.? அம்பயர்களின் முடிவால் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும்.. அஸ்வின் பேசியது என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டி சென்னையில் நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆடிய ஜோஸ் பட்லர் அரைசதம் 52 ரன்கள் அடித்து அரைசதம் விளாசினார். தவிர தேவ்தத் படிக்கல்(38), அஷ்வின் (30), ஹெட்மயர்(30) ஆகியோர் அடித்த ரன்களும் சேர்த்து மொத்தம் 20 ஓவரில் 175 ரன்கள் அடித்தது சிஎஸ்கே.
அதன் பிறகு 176 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே அணி விரட்டியதில், தோனி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் கடைசியில் சிக்ஸர் விளாசினர். எனினும் 20 ஓவர் முடிவில் 172 ரன்கள் அடித்து 3 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியுற்றது. தோனிக்கு இது 200வது ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீசியது. அப்போது, பனிப்பொழிவு இருந்ததால், பந்து வழுக்கியது. இதனால் அம்பயர்கள் பவுலிங் அணிக்கு வேறு பந்தை வழங்கினர். இப்படி, பனி என்பது இந்த ஆட்டத்தின் ஒரு அங்கமாகவும், வியூகமாகவும் மாறியது. 2வது இன்னிங்ஸில் பனி தாக்கம் பவுலர்களுக்கு சிரமமாக இருந்தால், அது பேட்டிங்கிற்கு சாதகமாகிவிடும். இந்நிலையில் அம்பயர்கள் பந்தை மாற்றி வழங்கினர். இப்படி ஒரு விஷயம் ஐபிஎல் வரலாற்றில் நடந்ததே இல்லை என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், “அம்பயர்கள் பந்தை மாற்றி வழங்கியது வியப்பாக இருந்தது. இந்த சீசனிலும் இப்படி சில முடிவுகள் எனக்கு வியப்பாகவே அமைந்தன. இன்னிங்ஸின் இடையில் இப்படி பந்தை மாற்றி கொடுத்ததும் அதிர்ச்சி ஆனேன். இவ்வாறு செய்தது நல்லது, கெட்டது என்பதை தாண்டி, இரண்டு அணிகளுக்கும் இது சரியான பேலன்ஸாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்