‘வாழ்க்கை ஒரு வட்டம்’! இவர் யாருன்னு தெரியுதா?.. மறுபடியும் அந்த ‘டயலாக்கை’ சொல்லி கலாய்க்கும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் டிரிங்ஸ்மேனாக தண்ணீர் கொண்ட சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘வாழ்க்கை ஒரு வட்டம்’! இவர் யாருன்னு தெரியுதா?.. மறுபடியும் அந்த ‘டயலாக்கை’ சொல்லி கலாய்க்கும் ரசிகர்கள்..!

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. ஆஸ்திரேலிய அணியின் கோட்டை என கருதப்படும் கப்பா மைதானத்தில் இந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி நடைபெற்றது. சிங்கத்தின் குகையிலேயே வீழ்த்துவதுப்போல அப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா தோற்கடித்தது. 1988ம் ஆண்டுக்கு பின் கப்பா மைதானத்தில் முதல்முறையாக ஆஸ்திரேலியா தோல்வியை தழுவியது.

Netizens trolls Tim Paine for carrying drinks in BBL match

முன்னதாக சிட்னி மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினை பார்த்து, ‘அடுத்த போட்டி கப்பால நடக்குது... அங்கு வா பாத்துக்கிறேன்’ என வம்பிழுத்தார். அதற்கு, ‘இந்தியாவுக்கு வந்தால், அதுதான் உனக்கு கடைசி போட்டியாக இருக்கும்’ என அஸ்வின் பதிலடி கொடுத்தார். இப்படி வம்பிழுப்பதிலேயே குறியாக இருந்ததால், பல கேட்ச்களை டிம் பெய்ன் தவறவிட்டார்.

Netizens trolls Tim Paine for carrying drinks in BBL match

அவர் எந்த கப்பா மைதானத்தை குறிப்பிட்டு வம்பிழுத்தாரோ, அதே மைதானத்தில் இந்தியா வரலாற்று வெற்றியை பதிவு செய்தது. இதனால் அப்போது அவரை இந்திய ரசிகர்கள் கடுமையாக கிண்டல் செய்தனர்.

Netizens trolls Tim Paine for carrying drinks in BBL match

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பேஷ் தொடரில் ஹோபர்ட்ஸ் ஹரிகேன் அணியின் சார்பாக தற்போது டிம் பெய்ன் விளையாடி வருகிறார். ஆனால் அந்த அணியின் ப்ளேயின் லெவனில் அவர் இடம்பெறவில்லை. மேலும் போட்டியின்போது வீரர்களுக்கு டிரிங்ஸ்மேனாக தண்ணீர் பாட்டில்களை கொண்டு சென்றார். இந்த புகைப்படத்தை பதிவிட்டு இந்திய ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.

Netizens trolls Tim Paine for carrying drinks in BBL match

அதில், யாரையும் கேலியாக பேசக்கூடாது... உலகம் உருண்டை என்பதை டிம் பெய்ன் இனியாவது உணர்ந்துகொள்ள வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில் ஈகோ பார்க்காமல் நடந்துகொண்ட ஸ்போர்ட்ஸ்மேன்ஷிப்பை குறிப்பிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்