‘சிக்கனே இல்லாத சிக்கன் பிரியாணி மாதிரி இருக்கு உங்க டீம் செலக்சன்’!.. ஏங்க அவர் பெயர் லிஸ்ட்ல இல்லை?.. சரமாரியாக கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய வீரர்களின் பட்டியலை நேற்று முன்தினம் பிசிசிஐ வெளியிட்டது.

‘சிக்கனே இல்லாத சிக்கன் பிரியாணி மாதிரி இருக்கு உங்க டீம் செலக்சன்’!.. ஏங்க அவர் பெயர் லிஸ்ட்ல இல்லை?.. சரமாரியாக கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!

கடந்த 2019-ம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியது. அந்த ஆண்டிலிருந்து 2021-ம் ஆண்டு வரை நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை கணக்கில் கொண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவித்திருந்தது. அதன்படி இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களில், இந்தியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதி பெற்றுள்ளன. இப்போட்டி இங்கிலாந்து நாட்டின் சவுதாம்ப்டன் நகரில் வரும் ஜூன் மாதம் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

Netizens shocked after Bhuvneshwar Kumar dropped for WTC

இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் விளையாட உள்ள இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நேற்று முன்தினம் அறிவித்தது. மேலும் இந்த அணியே இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் என பிசிசிஐ தெரிவித்தது.

Netizens shocked after Bhuvneshwar Kumar dropped for WTC

கேப்டன் விராட் கோலி, துணைக்கேப்டன் ரஹானே, ரோஹித் ஷர்மா உட்பட 20 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் கே.எல்.ராகுல் மற்றும் விக்கெட் கீப்பர் சாஹா காத்திப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு காரணம், ஐபிஎல் தொடரின் ஏற்பட்ட வயிற்றுப் பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு கே.எல்.ராகுல் ஓய்வில் உள்ளார். அதேபோல் சாஹாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவரும் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் இருவரின் உடல்நிலை சரியாகும் பட்சத்தில் அணியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Netizens shocked after Bhuvneshwar Kumar dropped for WTC

இந்த நிலையில் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பாக இந்திய அணியில், முன்னணி வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் இடம்பெறாதது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து மைதானம் சுவிங் செய்ய ஏதுவான ஆடுகளம் என்றும், அதனால் புவனேஷ்வர்குமார் போன்ற வீரர் இருந்தால் இந்திய அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Netizens shocked after Bhuvneshwar Kumar dropped for WTC

அவரை அணியில் எடுக்காததற்கான காரணம் என்ன சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். புவனேஷ்வர்குமார் கடந்த 2018-ம் ஆண்டு நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன்பிறகு இந்திய டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்