"அவரு பேட்டிங் பாக்க 'தோனி' மாதிரியே இருக்கு... 'இந்தியா'க்கு நல்ல ஃபினிஷர் கெடச்சுட்டாரு..." 'இளம்' வீரரை வாழ்த்தித் தள்ளிய 'நெட்டிசன்'கள்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இன்று நடைபெற்ற முதல் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

"அவரு பேட்டிங் பாக்க 'தோனி' மாதிரியே இருக்கு... 'இந்தியா'க்கு நல்ல ஃபினிஷர் கெடச்சுட்டாரு..." 'இளம்' வீரரை வாழ்த்தித் தள்ளிய 'நெட்டிசன்'கள்!!!

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணி, தொடக்கத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் தோல்வி பெறும் என்றே அனைவரும் கருதினர். 

 

ஆனால், ஆறாவது விக்கெட்டுக்கு கை கோர்த்த டெவாட்டியா மற்றும் பராக் ஆகியோர் சிறப்பாக ஆடினர். மிக சிறந்த பவுலிங் யூனிட்டை கொண்டுள்ள ஹைதராபாத் அணியின் பந்துகளை இருவரும் சிதறடித்தனர். இறுதியில் ஒரு பந்து மீதம் வைத்து அதிரடி வெற்றியை ராஜஸ்தான் அணி பெற்றது.

 

 

 

 

 

இதுவரை 3 போட்டிகளில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இரண்டு போட்டிகளில் டெவாட்டியாவின் அதிரடியால் வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக, பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரே ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார். அதே போல, இன்றும் மிகச் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தியிருந்த நிலையில், அவருக்கு நெட்டிசன்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

பலர், டெவாட்டியா போன்ற ஒரு ஃபினிஷர் தான் இந்திய அணிக்கு தேவை என்றும், இக்கட்டான சூழ்நிலையில் அவரின் அசாத்திய பேட்டிங் தோனியை நினைவுபடுத்துவது போல உள்ளதாகவும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்