ஒரு சிக்ஸ் கூட அடிக்கல... ஆனாலும் எதிரணியை 'மிரட்டி' சுருட்டி... பழமொழியை 'மாற்றி' எழுத வைத்த வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஹைதராபாத் அணி நீண்ட போராட்டத்துக்கு பின் தன்னுடைய முதல் வெற்றியை டெல்லி அணி எதிராக நேற்று பதிவு செய்துள்ளது. குறிப்பாக ரசிகர்களால் ஆவலாக எதிர்பார்க்கப்பட்ட கனே வில்லியம்சன் நேற்றைய போட்டியில் களமிறங்கி ரசிகர்களின் ஏக்கத்தையும், வருத்தத்தையும் ஒருசேர போக்கி விட்டார். வழக்கம்போல தன்னுடைய நிதான ஆட்டத்தால் அவர் டெல்லி அணியை மிரட்டி விட்டார்.

ஒரு சிக்ஸ் கூட அடிக்கல... ஆனாலும் எதிரணியை 'மிரட்டி' சுருட்டி... பழமொழியை 'மாற்றி' எழுத வைத்த வீரர்!

26 பந்துகளை சந்தித்த கனே 5 பவுண்டரிகள் மட்டுமே அடித்தார். ஒரு சிக்ஸர் கூட அடிக்கவில்லை. ஆனாலும் மின்னல் வேகத்தில் ஓடி,ஓடி மேலும் 21 ரன்களை எடுத்த அவர் 41 ரன்களில் இருந்தபோது கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கனேவின் ஸ்ட்ரைக் ரேட் 157.69 ஆக உள்ளது. இதைப்பார்த்த ரசிகர்கள் 'இத இத இதத்தான் நாங்க எதிர்பார்த்தோம்' என ட்விட்டரில் சரவெடிகளாக தாளித்து வருகின்றனர்.

Netizens enjoy Kane Williamson's 41 against Delhi Capitals

வில்லியம்சனின் ஆட்டத்தை பார்த்த ஐபிஎல் அணி நிர்வாகம் No Pain No Gain  என்ற பழமொழியை 'No Kane No Gain' என மாற்றி எழுதி விட்டது. அதாவது கனே இல்லை என்றால் வெற்றி இல்லை என்ற ரீதியில் மறைமுகமாக ஹைதராபாத் அணிக்கு ஐபிஎல்  நிர்வாகம் அறிவுரை வழங்கி உள்ளது. அடுத்து வருகின்ற வெள்ளிக்கிழமை சென்னை  அணியை ஹைதராபாத் அணி சந்திக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்