‘என்ன மனுஷன்பா அவரு’... ‘தமிழக வீரரை பார்த்து வியக்கும் நெட்டிசன்கள்’... ‘வைரலாகும் கடைசி ஓவரால்’... ‘குவியும் ஆதரவு’...!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பைனலுக்கு செல்ல வேண்டிய போட்டியில் தோற்றாலும், தமிழக வீரர் நடராஜன் செய்த காரியம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

‘என்ன மனுஷன்பா அவரு’... ‘தமிழக வீரரை பார்த்து வியக்கும் நெட்டிசன்கள்’... ‘வைரலாகும் கடைசி ஓவரால்’... ‘குவியும் ஆதரவு’...!!

நேற்றிரவு பிளே ஆஃப் சுற்றின் இறுதிப் போட்டி டெல்லி அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் இடையில் நடைபெற்றது. பரபரப்பாக சென்ற செமி பைனல் போட்டியில் ஹைதராபாத்தை வீழ்த்தி டெல்லி அணி வெற்றிபெற்றது. இதில் முதலில் ஆடிய டெல்லி அணி 189 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் களமிறங்கிய ஹைதராபாத் அணி 172 மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

Netizens DEMAND Place For Natarajan In The Indian T20 Team

இந்த போட்டியில் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்து இருந்தாலும், தொடரில் நடந்த சில சம்பவங்கள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அதிலும் தமிழக வீரர் நடராஜன் ஹைதராபாத் அணிக்காக போட்ட கடைசி ஓவர் பெரிய அளவில் வைரலாகி உள்ளது. ஹைதராபாத் அணியில் மார்ஷ், புவனேஷ்வர் குமார் காயமடைந்த நிலையில் டெத் ஓவர் போடும் பணியை நடராஜன் வெகு சிறப்பாக செய்து வருகிறார். நேற்று கடைசி ஓவர் வீசிய நடராஜன் வெறும் 7 ரன்கள்தான் கொடுத்தார்.

அதிலும் அவர் 6 பந்திலும் யார்க்கர் போட்டது முன்னாள் வீரர்களையும், ரசிகர்களையும் மலைக்க வைத்தது. பும்ரா ஷமி போன்ற வீரர்கள் கூட கடைசி ஓவரில் ஆறு பந்தும் யார்க்கர் போட முடியவில்லை. ஆனால் இந்திய அணியில் இடம் பிடிக்காத ஒரு வீரர் ஆறும் பந்தும் யார்க்கர் போடுவது பலரையும் வியப்பிற்கு உள்ளாக்கி உள்ளது.

Netizens DEMAND Place For Natarajan In The Indian T20 Team

அதுவும் இவர் துல்லியமாக சரியாக வேகத்தில் , டென்சன் இல்லாமல் பந்து வீசுவது பலரையும் வியப்பிற்கு ஆழ்த்தி உள்ளது. இந்த சீசனில் அதிக யார்க்கர் வீசிய வீரர் என்ற பெயரை நடராஜன் பெற்றுள்ளார். மொத்தம் 63 யார்க்கர்களை இவர் வீசி உள்ளார். மற்ற வீரர்கள் யாரும் 30-க்கும் அதிகமான யார்க்கர் பந்துகளை இந்த தொடரில் வீசவில்லை.

Netizens DEMAND Place For Natarajan In The Indian T20 Team

நேற்று இவரின் பவுலிங்கை பார்த்த பதான் போன்ற முன்னாள் வீரர்கள், நெட்டிசன்கள் பலர் நடராஜனை இந்திய ஆடும் அணியில் எடுக்க வேண்டும். பும்ராவையும் இவரையும் ஒன்றாக ஆட வைக்க வேண்டும். இவர்கள் ஒன்றாக களமிறங்கினால் மிக சிறப்பாக இருக்கும்.. இந்திய பவுலிங் புதிய உச்சத்தை அடையும் என்று கூறியுள்ளனர். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடராஜனை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் வலுத்து வருகிறது. 

மற்ற செய்திகள்