"இந்நேரம் நான் 'கிரிக்கெட்' ஆடிட்டு இருந்துருக்கணும்... ஆனா நான் இப்போ..." கொரோனாவால் தலைகீழான 'இளம்' வீரரின் வாழ்க்கை,,.. கலங்கிய 'ரசிகர்'கள்!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தாண்டு சீனாவில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று காரணமாக, அனைத்து உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

"இந்நேரம் நான் 'கிரிக்கெட்' ஆடிட்டு இருந்துருக்கணும்... ஆனா நான் இப்போ..." கொரோனாவால் தலைகீழான 'இளம்' வீரரின் வாழ்க்கை,,.. கலங்கிய 'ரசிகர்'கள்!!!

உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் கொரோனா தொற்று மூலம் இதுவரை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கொடிய தொற்றின் காரணமாக உலகெங்கிலுமுள்ள மக்கள் வேலையை இழந்து தவித்தனர். இதன் காரணமாக, பலர் தங்களது தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு மாறிப் போன செய்திகள் அதிகம் வைரலாகின.

இந்நிலையில், அனைத்து விளையாட்டு போட்டிகளும் தள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நெதர்லாந்து அணியைச் சேர்ந்த இளம் வீரர் பால் வான் (Paul van Meekeren), உருக்கமான பதிவு ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கொரோனா இல்லாமல் போயிருந்தால் இன்று திட்டமிடப்பட்டிருந்த டி 20 உலக கோப்பையின் இறுதி போட்டி நடைபெறும் என இஎஸ்பிஎன் க்ரிக் இன்போ ட்வீட் ஒன்றை செய்திருந்தது. 

 

இதனைப் பகிர்ந்த பால் வான், 'இந்நேரம் நான் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால், எனது செலவுகளுக்காக நான் தற்போது உணவு டெலிவரி செய்து வருகிறேன்' என ஏக்கத்துடனும், உருக்கத்துடனும் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது அதிகம் வைரலாகியுள்ள நிலையில், ரசிகர்கள் அவருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் கமெண்ட்டுகளை செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்