பரிசு மழையில் திக்குமுக்காடும் ‘தங்கமகன்’.. பிரபல நிறுவனம் ‘வேறலெவல்’ அறிவிப்பு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பல நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்து வருகிறது.
டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். இதன்மூலம் 120 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்தியா முதல் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதால் பதக்கப் பட்டியலில் 65-ம் இடத்திலிருந்து 47-வது இடத்திற்கு முன்னேறியது.
இதுகுறித்து கூறிய நீரஜ் சோப்ரா, ‘ஈட்டில் எறிதலில் 90.57 மீட்டர் தூரம் வீசி முந்தைய ஒலிம்பிக் சாதனையை முறியடிக்க நினைத்தேன். அதற்காக என்னுடைய சிறந்த பங்களிப்பை அளித்தேன். ஆனால் இலக்கை அடையவில்லை. விரைவில் அந்த இலக்கை அடைவேன்’ எனக் கூறியுள்ளார்.
இந்த நிலையில், நீரஜ் சோப்ராவை கௌரவப்படுத்தும் விதமாக பல முன்னணி நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளை அளித்து வருகின்றன. அந்த வகையில் OYO நிறுவன சிஇஒ ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், ‘டோக்கியோ ஒலிம்பிக் தடகளத்தில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா உலகம் முழுவதிலும் உள்ள OYO அறைகளில் இலவசமாகத் தங்கிக் கொள்ளலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஹரியானா மாநில அரசு அவருக்கு ரூ. 6 கோடி பரிசு மற்றும் கிரேட் 1 அரசுப் பணி வழங்குவதாக அறிவித்தது. அதேபோல் இண்டிகோ விமான நிறுவனம், நீரஜ் சோப்ரா ஓராண்டிற்கு தங்களது விமானத்தில் இலவசமாகப் பயணம் செய்யலாம் எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்