"அஸ்வின் பேருல".. மனைவிக்கு வந்த கோபம்.. நாதன் லயன் உடைத்த சீக்ரெட்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தான் தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்த்து வருகின்றனர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | "அவங்க கண்ணுல பயமில்ல".. 67 வயதிலும் அந்தரத்தில் சைக்கிள் ஓட்டி.. துணிச்சலா Vibe செய்த மூதாட்டி..
இரண்டாவது போட்டி 17.02.2023 அன்று டெல்லி மைதானத்தில் வைத்து ஆரம்பமாகிறது. முன்னதாக நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் முன்னேறுவதற்கு இந்திய அணி இந்த தொடரைக் கைப்பற்ற வேண்டிய சூழலில் உள்ளது. அப்படி இருக்கையில் தொடரையும் வெற்றியுடன் இந்திய அணி தொடங்கி உள்ளதால் நிச்சயம் அடுத்தடுத்த போட்டிகளிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.
அதே வேளையில், முதல் போட்டி தோல்விக்கு நிச்சயம் ஆஸ்திரேலியா அணி பதிலடி கொடுக்கும் வகையில் டெல்லி மைதானத்தை கணித்து ஆடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளுக்குமே இரண்டாவது டெஸ்ட் போட்டி முக்கியமான ஒன்று என்பதால் நிச்சயம் விறுவிறுப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சுழற் பந்துவீச்சாளர் நாதன் லயன் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து தெரிவித்துள்ள கருத்து அதிகம் வைரலாகி வருகிறது. டெஸ்ட் போட்டியில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வரும் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 450 விக்கெட்டுகளை கடந்து பல்வேறு சாதனைகளையும் படைத்திருந்தார். டெஸ்ட் போட்டி என்றால் நிச்சயம் அஸ்வின் சூழல் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். முதல் போட்டியில் அவர் 8 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ள சூழலில் இரண்டாவது போட்டியிலும் அவரை எதிர்கொள்ள ஆஸ்திரேலிய அணிகள் வியூகங்கள் வகுக்கும் என்றும் தெரிகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இதனிடையே நாதன் லயன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் அஸ்வின் குறித்து பேசி உள்ளார். "அஸ்வின் ஒரு சிறந்த பந்துவீச்சாளர். அவர் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் அவர் சாதனையே அவர் யாரென்று சொல்லும். உண்மையைச் சொன்னால் நான் அஸ்வினை விட முற்றிலும் மாறுபட்ட பந்துவீச்சாளர்.
நான் டெஸ்ட் போட்டியில் விளையாட இந்தியா வருவதற்கு முன்பாக அஸ்வின் வீடியோவை பார்த்தேனா என்று நீங்கள் கேட்டால் ஆமாம் என்று சொல்வேன். இங்கு வருவதற்கு முன்பு பல நாட்கள், பல மணி நேரங்கள் அஸ்வின் பந்து வீச்சுகளின் வீடியோக்களை லேப்டாப்பில் நேரக்கணக்கில் பார்த்துக் கொண்டே இருப்பேன். இதனால் என் மனைவிக்கு என் மேல் அதிகமாக கோபம் வந்து விட்டது. அவரது வீடியோக்கள் பார்த்து நிறைய கற்றுக் கொண்டேன். இன்னும் கற்றுக் கொள்ளவும் நிறைய இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்