‘ரொம்ப பெருமையா இருக்கு’!.. நடராஜன் பதிவிட்ட ஒரே ஒரு ‘போட்டோ’.. குவியும் வாழ்த்து..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் டெஸ்ட் ஜெர்சியை அணிந்து வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த கிரிக்கெட் தொடரில் தமிழக வீரர் நடராஜனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நெட் பவுலராக அழைத்து செல்லப்பட்ட அவர், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் நடராஜன் ஆடவில்லை, அதனை அடுத்து களமிறங்கிய 3-வது ஒருநாள் போட்டியில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனைத் தொடர்ந்து 3 டி20 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதனால் டெஸ்ட் அணியிலும் நடராஜன் இடம்பெற வேண்டும் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உட்பட பல வீரர்களும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின்போது வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காரணமாக விலகினார். தற்போது அந்த காயம் முழுமையாக குணமடையாததால், அவர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதனால் 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நடராஜன் இடம்பெற்றுள்ளதாக சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது.
இந்த நிலையில் டெஸ்ட் போட்டிக்கான வெள்ளை நிற இந்திய ஜெர்சியுடன் போட்டோ எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடராஜன் பதிவிட்டுள்ளார். அதில், ‘வெள்ளை ஜெர்சியை அணிந்தது பெருமை மிகுந்த தருணம். அடுத்த சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்’ என நடராஜன் பதிவிட்டுள்ளார்.
A proud moment to wear the white jersey 🇮🇳 Ready for the next set of challenges 👍🏽#TeamIndia @BCCI pic.twitter.com/TInWJ9rYpU
— Natarajan (@Natarajan_91) January 5, 2021
நடராஜன் தெரிவித்ததுபோலவே டெஸ்ட் போட்டி அவருக்கு சவால் நிறைந்த ஒன்றுதான். இதனை அவரது நலம் விரும்பியான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னரும் சொல்லியிருக்கிறார்.
அதில், ‘ஒருநாள், டி20 போட்டி போல் டெஸ்ட் போட்டிகள் இருக்காது. இதில் தொடர்ந்து நிறைய பந்துகள் சரியான லென்த்-ல் வீசிக்கொண்டே இருக்க வேண்டும். அடுத்தடுத்த ஓவர்களில் பந்துவீச எப்போதும் தயாராக இருக்க வேண்டும். நடராஜனால் அப்படி வீச முடியுமா என்பது முழுமையாக எனக்கு தெரியவில்லை. ஆனாலும் நடராஜன் நன்றாக வீசுவார், சிறப்பாக விளையாடுவார் என்று நம்புகிறேன்’ என வார்னர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்