"இத எல்லாம் என் வாழ்க்கை'ல மறக்கவே முடியாது.. இதுக்கு எல்லாம் காரணம் அவங்க மட்டும் தான்.." நெகிழ்ந்து போன 'நடராஜன்'!.. 'வைரல்' வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த ஐபிஎல் சீசனில் சன் ரைசர்ஸ் அணிக்காக ஆடி, தனது திறமையை நிரூபித்த தமிழக வீரர் நடராஜனுக்கு, ஆஸ்திரேலிய தொடரில் வலைப்பந்து வீச்சாளராகும் வாய்ப்பு கிடைத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, சில வீரர்கள் காயமடைந்து ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகியதால், ஒரு நாள் போட்டி, டி 20 மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகும் வாய்ப்பு நடராஜனுக்கு அமைந்தது. அதிர்ஷ்டத்தால் தனக்கு கிடைத்த வாய்ப்பை, மிகக் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட நடராஜன் (Natarajan), கிரிக்கெட் உலகில் தனக்கான முத்திரையையும் பதித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் அவர் களமிறங்கினார். இந்நிலையில், இன்று ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரில், ஹைதராபாத் அணிக்காக ஆடவுள்ள நடராஜன், அந்த அணியினருடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, தனது கிரிக்கெட் பயணம் குறித்து நடராஜன் தமிழில் பேசும் வீடியோ ஒன்றை, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இதில் பேசிய நடராஜன், 'மீண்டும் ஒரு முறை சன் ரைசர்ஸ் குடும்பத்துடன் இணைந்தது மகிழ்ச்சி. நிறைய இளம் வீரர்களுடன் எங்களது அணி, இன்னும் அதிக பலத்துடன் இந்த முறை விளங்குகிறது. கடந்த ஆண்டு சன் ரைசர்ஸ் அணியில், நிறைய வாய்ப்பு கிடைத்து, அதனைச் சிறப்பாக நான் பயன்படுத்திக் கொண்டதால், இந்திய அணியின் வலைப்பந்து வீச்சாளராக தேர்வானேன்.
சில வீரர்கள் காயமடைந்திருந்ததால், எனக்கு சர்வதேச போட்டியில் ஆடும் வாய்ப்பும் கிடைத்தது. ஐபிஎல் போட்டிகளில் தன்னம்பிக்கையுடன் ஆடியதால், இந்திய அணியில் ஆடும் போதும், சற்று எளிதாக இருந்தது. இதனால், நான் சன் ரைசர்ஸ் அணிக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்.
❝Those 6 months were like a dream come true for me.❞
Words as powerful as @Natarajan_91's bowling 🧡#OrangeArmy #OrangeOrNothing #IPL2021 pic.twitter.com/McLwEoKRXH
— SunRisers Hyderabad (@SunRisers) April 9, 2021
கடந்த ஆறு மாதங்கள், ஒரு கனவு மாதிரி இருந்தது. இதன் மூலம் கிடைத்த தருணங்களை நிச்சயம் வாழ்க்கையில் மறந்து விட முடியாது' என நடராஜன் நெகிழ்ச்சியுடன் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
மற்ற செய்திகள்