"எங்களோட குட்டி தேவதை நீ..." உணர்ச்சி பொங்க... மனைவி, மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட 'நடராஜன்'... லைக்குகளை அள்ளி வழங்கிய 'நெட்டிசன்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலிய தொடரில், வலைப்பயிற்சி பந்து வீச்சாளராக தமிழக வீரர் நடராஜன் தேர்வாகி ஆஸ்திரேலியா சென்றிருந்தார்.

"எங்களோட குட்டி தேவதை நீ..." உணர்ச்சி பொங்க... மனைவி, மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட 'நடராஜன்'... லைக்குகளை அள்ளி வழங்கிய 'நெட்டிசன்கள்'!!

ஆனால், ஆஸ்திரேலியா சென்ற நடராஜனுக்கு வேற லெவலில் அதிர்ஷ்டம் காத்திருந்தது. வலைப்பந்து வீச்சாளராக மட்டுமே சென்றிருந்த நடராஜன், சில வீரர்கள் காயமடைந்திருந்த காரணத்தால். டி 20, ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் மிக குறுகிய சமயத்தில் அறிமுகமாகும் வாய்ப்பு அமைந்தது.

natarajan posts adorable pic with his wife and daughter

தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகக் கச்சிதமாக பயன்படுத்திக் கொண்ட நடராஜன், தனது அசாத்திய பந்து வீச்சுத் திறமையால் முத்திரையையும் பதித்திருந்தார். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகும், நடராஜனின் வித்தியாசமான பந்து வீச்சை திரும்பி பார்த்தது. பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அவருக்கு பாராட்டையும் அளித்திருந்தனர்.

natarajan posts adorable pic with his wife and daughter

அடுத்ததாக நடைபெறவிருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 போட்டிகளுக்காகவும், இந்திய அணியில் நடராஜன் தேர்வாகியுள்ளார். முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் முடிந்த கையுடன், இந்திய அணி வீரர்களுடன் ஆஸ்திரேலியா கிளம்பியிருந்தார் நடராஜன். அப்போது, அவரது குழந்தை பிறந்திருந்த நிலையில், நீண்ட நாட்கள் நடைபெற்ற ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு தான் அவர் மகளைக் காண சொந்த ஊர் திரும்பி வந்தார்.

 

இந்நிலையில், தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கங்களில் நடராஜன் வெளியிட்டுள்ளார். குழந்தைக்கு ஹன்விகா என பெயர் சூட்டியுள்ள நிலையில், 'எங்களின் குட்டி தேவதை ஹன்விகா. நீ எங்கள் வாழ்க்கையில் கிடைத்த அழகான பரிசு. எங்கள் வாழ்க்கை இன்னும் மகிழ்ச்சியாக அமையவும் நீ தான் காரணம். எங்களை உன் பெற்றோராக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நாங்கள் எப்போதும் உன்னை நேசித்துக் கொண்டே இருப்போம்' என உணர்ச்சிகரமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடராஜன் தனது மகளுடன் வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், இந்த புகைப்படம் நெட்டிசன்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்