'இன்ஸ்டாவில் உருகிய நடராஜன்'... 'அதுல இப்படி ஒரு ரிப்ளை வரும்ன்னு யாரும் நினைக்கல'... வைரலாகும் 'இன்ஸ்டா' பதிவு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பல முன்னணி வீரர்கள் இல்லாத இந்திய அணி, இளம் வீரர்களுடன் களமிறங்கி ஆஸ்திரேலிய மண்ணிலேயே வைத்து அந்த அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியிருந்தது.

'இன்ஸ்டாவில் உருகிய நடராஜன்'... 'அதுல இப்படி ஒரு ரிப்ளை வரும்ன்னு யாரும் நினைக்கல'... வைரலாகும் 'இன்ஸ்டா' பதிவு!

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் கடைசி தினத்தில் இந்திய அணி வீரர்கள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை தங்கள் வசமாக்கினர். இந்திய அணியின் வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றிக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், போட்டிக்கு பின்னர் தமிழக வீரர் நடராஜன் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய தொடரின் வலைப்பந்து வீச்சாளராக வந்த தமிழக வீரர் நடராஜன், மற்ற சில வீரர்களுக்கு காயம் அடைந்ததன் காரணமாக, அவருக்கு டி 20, ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டி என அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆட வாய்ப்பு கிடைத்தது. அது மட்டுமில்லாமல், தனக்கு கிடைத்த முதல் சர்வதேச வாய்ப்பையே மிகவும் சிறப்பாக பயன்படுத்தி தனக்கான முத்திரையையும் அவர் பதித்தார்.

தனது கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத இந்த பயணம் குறித்து பதிவிட்ட நடராஜன், 'கடந்த இரண்டு மாதங்கள் எனது வாழ்வின் கனவு தருணங்களாக இருந்தன. இந்திய கிரிக்கெட் அணியுடனான இந்த பயணம், எனது வாழ்க்கையில் மிகச் சிறந்ததாகும். இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெறுவது என்பது என் கனவாக இருந்தது. இந்த தொடரை நாங்கள் வெல்ல பல தடைகளை கடந்து வந்துள்ளோம். உங்களின் ஆதரவிற்கு நன்றி' என குறிப்பிட்டுள்ளார்.

 

நடராஜனின் நெகிழ்ச்சியான இந்த பதிவின் கீழ் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், 'உன்னை நினைத்து பெருமையாக இருக்கிறது. ஹைதராபாத் அணிக்காக விளையாடியது, உனக்கு பிறந்த முதல் குழந்தையை பார்க்க முடியாமல் அதனை தியாகம் செய்து கிரிக்கெட் விளையாடியது, அதன் பிறகு, அனைத்து வடிவிலான அறிமுகமானது என அனைத்தையும் பார்க்க ஆச்சரியமாக உள்ளது' என நடராஜனின் கிரிக்கெட் பயணத்தை பாராட்டி வார்னர் கமெண்ட் செய்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடரை இழந்ததால் கடும் விமர்சனத்துக்குள் ஆக்கப்பட்ட போதும், தன்னுடன் ஐபிஎல் அணியில் ஆடிய எதிரணி வீரர் நடராஜனை பெருந்தன்மையுடன் பாராட்டிய வார்னரையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்