"'நட்டு', இப்போதைக்கு உங்க 'டார்கெட்' இதான்..." நடராஜனுக்கு 'முக்கிய' அட்வைஸ் கொடுத்த 'முன்னாள் வீரர்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தின் போது இந்திய கிரிக்கெட் அணிக்கு வேண்டி அறிமுகமாக, தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்திருந்தது.

"'நட்டு', இப்போதைக்கு உங்க 'டார்கெட்' இதான்..." நடராஜனுக்கு 'முக்கிய' அட்வைஸ் கொடுத்த 'முன்னாள் வீரர்'!!!

வலைப்பந்து வீச்சாளராக ஆஸ்திரேலியா சென்ற நடராஜன், டி 20, ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகள் என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் மிக குறுகிய நாட்களில் அறிமுகமாகி அனைத்திலும் தனக்கான முத்திரையையும் அவர் பதித்திருந்தார்.

நடராஜனின் பவுலிங், பல முன்னணி கிரிக்கெட் வீரர்களால் கவனிக்கப்பட்டு பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.  இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் நடராஜனுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளார். முன்னதாக, இந்திய அணியை பொறுத்தவரையில் ஜாகீர் கான், இர்பான் பதானுக்கு பிறகு சிறந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இதுகுறித்து பேசிய இர்பான் பதான், 'இடதுகை பந்து வீச்சாளர்கள் மூலம் பேட்ஸ்மேன்களை அச்சுறுத்த முடியும். இதனால் நடராஜன் டெஸ்ட் போட்டிகளில் நிறைய செய்ய வேண்டும். அவரது ஆங்கிள், ரிதம் ஆகியவற்றை அவர் சரி செய்து கொள்ள வேண்டும். அவர் பந்து வீசும் போது, தன் உடலை பந்திற்கு பின்னால் கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் பந்தை பேட்ஸ்மேனுக்கு அருகில் கொண்டு செல்ல முடியும்.

அவரது முதல் குறிக்கோளாக அடுத்த 7,8 ஆண்டுகள் இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பதில் அதிக கவனம் இருக்க வேண்டும். அதற்காக அவர் தனது உடற்தகுதி மீது அதிக அக்கறை கொள்ள வேண்டும். தன்னிடம் உள்ள திறமைகள் மூலம் இதனை செய்து கொண்டே நிறைய போட்டிகளில் ஆடும் போது, இன்னும் அதிகம் அவர் கற்றுக் கொள்வார்' என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்