Video: தோனி ‘விக்கெட்டை’ எடுக்குறதுதான் என் ‘சாதனை’.. சொன்னதை செஞ்சு காட்டிய ‘தமிழக’ வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடும் தமிழக வீரர் நடராஜன், சென்னை அணியின் கேப்டன் தோனியின் விக்கெட்டை எடுத்தார்.

Video: தோனி ‘விக்கெட்டை’ எடுக்குறதுதான் என் ‘சாதனை’.. சொன்னதை செஞ்சு காட்டிய ‘தமிழக’ வீரர்..!

ஐபிஎல் தொடரின் 29-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை செனை அணி எடுத்தது. இதில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் குர்ரன் மற்றும் டு பிளிசிஸ் களமிறங்கினர். டு பிளிசிஸ் தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார்.

Natarajan dreams come true after getting Dhoni wicket

இதனை அடுத்து களமிறங்கிய வாட்சனுடன் (42) ஜோடி சேர்ந்த சாம் குர்ரன் (31) அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். அடுத்து களமிறங்கிய அம்பட்டி ராயுடு 41 ரன்கள் எடுத்து அவுட்டானதும் கேப்டன் தோனி களமிறங்கினார். அப்போது போட்டியின் 19-வது ஓவரை தமிழக வீரர் நடராஜன் வீசினார். அந்த ஓவரின் 5-வது பந்தில் சிக்ஸர் விளாசிய தோனி, அடுத்த பந்தில் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இந்தநிலையில் தமிழகத்தை சேர்ந்தவரும், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளுருமான அஸ்வின் எடுத்த நேர்காணல் ஒன்றில் நடராஜன் கலந்து கொண்டார். அப்போது யாருடைய விக்கெட்டை எடுத்தால் சாதனையாக கருதுவீர்கள் என அஸ்வின் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு தோனியின் விக்கெட்டை எடுப்பதைதான் சாதனை என நினைப்பதாக நடராஜன் பதிலளித்திருந்தார். இந்த நிலையில் இன்றைய போட்டியில் தோனியின் விக்கெட்டை எடுத்ததன் மூலம் அவரது கனவு நிறைவேறியுள்ளது.

மற்ற செய்திகள்