"திரும்ப வந்த நடராஜன்.." பந்தில் படு 'ஸ்பீடு'.. அடுத்து நடந்த தரமான சம்பவம்.. வைரலாகும் வீடியோ
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த ஆண்டு நடைபெற்றிருந்த ஐபிஎல் தொடரை, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நான்காவது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றி அசத்தியிருந்தது.
தொடர்ந்து, மார்ச் 26 ஆம் தேதி ஆரம்பமாகவுள்ள 15 ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் மோதுகின்றன.
ஐபிஎல் போட்டிகள் தொடங்க, இன்னும் ஒரு வாரம் கூட இல்லாத நிலையில், அனைத்து ஐபிஎல் அணி வீரர்களும், தீவிரமாக பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
புதிய ஐபிஎல் அணிகள்
அது மட்டுமில்லாமல், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் ஆகிய இரண்டு புதிய ஐபிஎல் அணிகள் இந்த முறை களமிறங்கவுள்ளதால், இரண்டு குழுக்கள் பிரிக்கப்பட்டு, லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் முன்னதாக நடைபெற்றிருந்த ஐபிஎல் ஏலத்தில், அனைத்து அணிகளும் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்ய கடும் போட்டி போட்டிருந்தனர்.
மீண்டும் நடராஜன்
அந்த வகையில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, தமிழக வீரர் நடராஜனை 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் மீண்டும் எடுத்துள்ளது. ஏற்கனவே, சன் ரைசர்ஸ் அணிக்காக களமிறங்கி வந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன், தன்னுடைய திறமையான பந்து வீச்சின் காரணமாக, இந்திய அணியிலும் இடம்பிடித்திருந்தார்.
காயத்தால் அவதி
மேலும் அவரின் யார்க்கர் பந்துகள், பிரெட் லீ உள்ளிட்ட பல கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாராட்டினையும் பெற்றிருந்தது. ஆனால், காயம் காரணமாக, தொடர்ந்து இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது. இதனிடையே, ஐபிஎல் ஏலத்தில் மீண்டும், ஹைதராபாத் அணியே அவரை எடுத்துள்ளது.
உடையும் ஸ்டம்ப்கள்
விரைவில் தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிகளிலும், அவர் மீண்டும் களமிறங்கி அசத்துவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், ஹைதராபாத் அணி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடராஜன் பயிற்சியில் பந்து வீசும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதில், அவர் வீசும் பந்து, ஸ்டம்பினை இரண்டு துண்டாக உடைத்துள்ளது. இது தொடர்பான வீடியோவினைக் கண்ட ரசிகர்கள், மீண்டும் அவர் பழைய ஃபார்முக்கு வந்து இந்திய அணியில் இடம்பிடிப்பார் என நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
அதே போல, கடந்த ஐபிஎல் தொடரில், கடைசி இடம் பிடித்திருந்த ஹைதராபாத் அணிக்கு பந்து வீச்சு பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பங்கும் இந்த முறை அதிக அளவில் கைகொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்