Video : "இந்த ஐபிஎல் சீசனோட பெஸ்ட் 'ball' இது தான்..." மீண்டும் ஒரு முறை மாஸ் காட்டிய 'நடராஜன்'!!... "நீ வேற லெவல் யா"!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் இன்று பெங்களூர் மட்டும் ஹைதராபாத் அணிகள் மோதி வருகின்றன.

Video : "இந்த ஐபிஎல் சீசனோட பெஸ்ட் 'ball' இது தான்..." மீண்டும் ஒரு முறை மாஸ் காட்டிய 'நடராஜன்'!!... "நீ வேற லெவல் யா"!!!

இந்த போட்டியில் தோல்வி பெறும் அணி தொடரில் இருந்து வெளியேறும் என்ற நிலையில், டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, ஆடிய பெங்களூர் அணியின் விக்கெட்டுகள் சிறிய இடைவெளியில் விழுந்த வண்ணம் இருந்தன.

டிவில்லியர்ஸ் மட்டும் அரை சதம் அடித்திருந்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஹைதராபாத் ஆடி வரும் நிலையில், முதல் இன்னிங்சில் 18 ஆவது ஓவரை ஹைதராபாத் அணியின் நடராஜன் வீசினர்.

அப்போது டிவில்லியர்ஸின் விக்கெட்டை யார்க்கர் பந்து வீசி மிக அற்புதமாக நடராஜன் அவுட் செய்தார். டிவில்லியர்ஸ் மட்டும் இறுதி வரை களத்தில் நின்றிருந்தால் நிச்சயம் இன்னும் அதிக ரன்களை பெங்களூர் அணி குவித்திருக்கும். ஆனால் நடராஜன் சிறப்பாக பந்து வீசி அவரது விக்கெட்டை வீழ்த்திய நிலையில், ரசிகர்கள் அனைவரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

 

தமிழக வீரரான நடராஜன் இந்த ஐபிஎல் சீசனில் அதிக யார்க்கர் பந்துகளை வீசி பல முன்னாள் வீரர்களின் பாராட்டுக்களைப் பெற்று வரும் நிலையில், இன்று அவர் வீசிய பந்து இந்த தொடரிலேயே சிறப்பான பந்து என பலர் தற்போது நடராஜனை புகழ்ந்து வருகின்றனர்.

 

 

மற்ற செய்திகள்