“இதுல எங்கடா ஓடுறது..?”... “மைதானத்தில் வீரர் செய்த காரியம்!”.. “பரபரப்பு நிமிடங்கள்”.. பரவும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவில், மெல்போர்னில் உள்ள டோக்லேண்ட் மைதானத்தில்  விறுவிறுவென நடந்துவரும் Big Bash League போட்டியில் நடந்த அசம்பாவித சம்பவம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

“இதுல எங்கடா ஓடுறது..?”... “மைதானத்தில் வீரர் செய்த காரியம்!”.. “பரபரப்பு நிமிடங்கள்”.. பரவும் வீடியோ!

ஆட்டத்தின் 4வது ஓவரின் போது, நாதன் எலிஸ் வீசிய 4வது பந்தினை எதிர்கொண்ட சாம் ஹார்ப்பர் பந்தை மிட்-ஆஃபிற்கு அடித்துவிட்டு, உடனடியாக ஒரு சிங்கிள் ஓடுவதற்கு முயற்சிக்கிறார். ஆனால் அதற்குள் ஃபீல்டர் ஒருவர் பந்தை தடுத்து, மீண்டும் நான்-ஸ்டிரைக்கர் எண்டிற்கு வீசுகிறார்.

மைதானத்தை பரபரக்கவைத்த இந்த திக் திக் நொடியில் திக்குமுக்காடிப்போன சாம் ஹார்ப்பர், மீண்டும் தன் முடிவை மாற்றிக்கொண்டு, பின்வாங்குகிறார். சற்றும் தாமதிக்காமல் கிரீஸை நோக்கி ஓடிவரத் திரும்புகிறார். 

ஆனால் அவர் திரும்பும்போதுதான் பின்னல் பவுலர் நின்றுகொண்டிருப்பதை பார்க்கிறார். ஆனால் உடலோட்டத்தை கட்டுப்படுத்த முடியாத ஹார்ப்பர், பவுலர் எல்லிஸ் மீது ஏறிப் பாய்ந்து அவரைத்தாண்டி விழுந்து உருள்கிறார். இதனால் உள்காயமடைந்த 23 வயது ஹார்ப்பர்

சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த வீடியோ KFC Big Bash League-ன் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பகிரப்பட்டுள்ளதை அடுத்து வைரலாகி வருகிறது.

BBL09, SAM HARPER, NATHAN ELLIS