"அவரு தான் இப்போ 'கேப்டன்' கூல்... 'கோலி'ய தூக்கிட்டு இவரையே கேப்டனா போடலாம்,,." ஒப்பனாக சொன்ன முன்னாள் 'வீரர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த சில தினங்களுக்கு முன் நடந்து முடிந்த 13 ஆவது ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி, ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
ஐபிஎல் தொடர்களிலேயே பலம் வாய்ந்த அணியாக விளங்கும் மும்பை அணிக்கு ரசிகர்கள் மற்றும் பல கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன், மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவை புகழ்ந்து பேசியுள்ளார்.
'ரோஹித் ஷர்மாவின் தலைமை, அவரின் அமைதியான குணம், சரியான நேரத்தில், சரியான முடிவை ஒரு கேப்டனாக திறம்பட எடுத்து வருகிறார். மும்பை அணியில் பல உலக அணிகளில் உள்ள வீரர்கள் மற்றும் இந்திய அணியில் சிறந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அந்த அணியுடன் ரோஹித் சிறந்த நேரத்தை கழித்துள்ளார். விராட் கோலி இந்திய அணியின் டி 20 கேப்டன் பதவியில் இருந்து விலகி, ரோஹித் ஷர்மா தலைமையேற்க இது தான் சிறந்த நேரம்' என நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ரோஹித் ஷர்மாவின் பேட்டிங் திறமை குறித்து பேசிய நாசர் ஹுசைன், 'ரோஹித் ஷர்மா, வெள்ளை பந்தில் சிறப்பாக ஆடக் கூடிய வீரர். அதே போல 50 ஓவர் போட்டிகளிலும் இரண்டு இரட்டை சதங்கள் அடித்து அசத்தியுள்ளார்' எனவும் கூறியுள்ளார். ஏற்கனவே விராட் கோலிக்கு பதிலாக ரோஹித் ஷர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டுமென பலர் தெரிவித்து வரும் நிலையில், நாசர் ஹுசைன் தற்போது தெரிவித்துள்ள கருத்து மேலும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
மற்ற செய்திகள்