'அந்த மனசு இருக்கே'... 'ஒலிம்பிக்கில் நடந்த அதிசயம்'... உலகையே திரும்பிப்பார்க்க வைத்த வீரர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடோக்கியோ ஒலிம்பிக்கில் தடகள விளையாட்டில் நடந்த சம்பவம் பலரது மனங்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இத்தாலியன் ஜியான்மார்கோ தம்பேரி மற்றும் கத்தாரின் முடாஸ் எஸ்ஸா பார்ஷிம் என்ற இரு வீரர்கள் உயரம் தாண்டுதல் போட்டியில் 2.37 மீட்டர் உயரத்தை அசால்டாக கிளியர் செய்தனர். ஆனால் வெற்றியாளரைத் தீர்மானிக்க ஆல்-டைம் ஒலிம்பிக் சாதனையான 2.39 மீட்டர் உயரத்திற்குப் பறை உயர்த்தி, அந்த உயரத்தைக் கடப்பவருக்குப் பதக்கம் என்ற முடிவு எடுக்கப்பட்டது.
இருவருக்கும் மூன்று முயற்சிகள் கொடுக்கப்பட்டன. ஆனால் இருவரும் அந்த முயற்சியில் தோல்வியைத் தழுவினர். அதன் முடிவாக இருவரும் தங்கப் பதக்கத்தை பகிர்ந்துகொள்ளச் சம்மதமா? என நடுவர் குழு கேட்க, பதக்கத்தைப் பகிர்ந்து கொள்ளத் தயார் என இருவரும் சொல்லியுள்ளனர்.
இதையடுத்து இருவரும் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டனர். வெற்றிக்குப் பிறகு இருவரும் நட்பாகக் கட்டியணைத்துக் கொண்டார்கள். இது பலரது மனங்களை வெகுவாக கவர்ந்தது. இதற்கிடையே ''எனது சிறந்த நண்பர்களில் ஜியான்மார்கோ தம்பேரியும் ஒருவர். களத்தில் மட்டுமல்லாது நாங்கள் இருவரும் களத்திற்கு வெளியேயும் நல்ல நண்பர்கள். எங்கள் நாடு வேறு வேறாக இருந்தாலும் நாங்கள் இருவரும் ஒன்றாகத் தான் பயிற்சி செய்வோம்” என முடாஸ் எஸ்ஸா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்