'அந்த ஜம்ப்ப மட்டும் பாருடி'... 'இப்படி ஒரு ட்விஸ்டை எதிர்பார்க்காத மேக்ஸ்வெல்'?... 'மிரண்டுபோன வீரர்கள்'... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிக்ஸர் தான் போக போகிறது எனத் தைரியமாக இருந்த மேக்ஸ்வெலுக்கு நிச்சயம் இது அதிர்ச்சியாகத் தான் இருந்திருக்கும்.
ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இதில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைத் தோற்கடித்தது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி 3-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் பெங்களூரு அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த நேரத்தில், ஆட்டத்தின் 9வது ஓவரில் கார்த்திக் தியாகி, மேக்ஸ்வலுக்கு பந்து வீசினார். அந்த பந்தை லாவகமாக எதிர்கொண்ட மேக்ஸ்வெல், இடது புறமாகப் புல் ஷாட் அடித்தார். பந்து சிக்ஸருக்கு தான் போகிறது என அனைவரும் நினைத்த நிலையில், அங்கு தான் பெரும் ட்விஸ்ட் காத்திருந்தது.
அங்கு பீல்டிங்யில் இருந்த முஸ்தபிசுர் ரஹ்மான் கண்ணிமைக்கும் நேரத்தில் பறந்து வந்து, மேலே தாவி சிக்ஸர் போக வேண்டிய பந்தைத் தடுத்து நிறுத்தி அசத்தினார். பந்து சிக்ஸருக்கு தான் போகிறது என நினைத்த மேக்ஸ்வெல் ஒரே ஒரு ஓட்டத்தோடு நிறுத்தி கொண்டார். சிக்ஸர் தான் போகப் போகிறது என நினைத்த பந்தைத் தாவிக் குதித்துப் பிடித்த முஸ்தபிசுர் ரஹ்மானின் பீல்டிங்யை பார்த்த இரு அணி வீரர்களும் மிரண்டு போனார்கள்.
Mustafizur Rahman🔥🔥🇧🇩 Outstanding Leaping Effort Saves A Six / #rohizofficial #fizz #ipl #cricket #IPL2021 pic.twitter.com/ClyDdmsipD
— Rohiz Official (@RohizKhan1) September 29, 2021
மற்ற செய்திகள்