தமிழக வீரருக்கு சச்சினின் 'ஸ்பெஷல்' அட்வைஸ்.. மிரட்டலாக ஆரம்பித்து பட்டையைக் கிளப்பிய வீரர்.. அடுத்த மேட்சும் அப்ப சம்பவம் இருக்கு..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் இதுவரை நான்கு போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இதுவரை மோதாத இரு அணிகளான ஹைதராபாத் சன் ரைசர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள், இன்று இரவு (29-03-2022) மோதுகின்றன.
போன வருஷம் பரம எதிரி.. ஆனா, இந்த தடவ சீனே வேற.. ஐபிஎல் போட்டியில் நடந்த சுவாரஸ்யம்..
முன்னதாக, இரண்டாவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்திருந்தது.
வெற்றி பெற்ற டெல்லி அணி
தொடர்ந்து ஆடிய டெல்லி அணி, 104 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், இதன் பிறகு இணைந்த லலித் யாதவ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர், அதிரடியாக ஆடி, 19 ஆவது ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற உதவினர். மற்ற மும்பை வீரர்களின் பவுலிங் பெரிய அளவில் எடுபடாமல் போனாலும், தமிழக வீரர் முருகன் அஸ்வின், 4 ஓவர்கள் பந்து வீசி, 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
கனவுல கூட நினைக்கல
முதல் முறையாக மும்பை அணியில் இணைந்துள்ள அஸ்வினின் பந்து வீச்சு, நல்லதொரு தொடக்கத்தை மும்பை அணிக்கு வேண்டி அமைத்துக் கொடுத்துள்ளது. இந்நிலையில், போட்டிக்கு பின்னர் மும்பை அணியில் ஆடியது பற்றி, முருகன் அஸ்வின் பேசிய வீடியோ ஒன்றை, மும்பை அணி ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இதில் பேசும் அவர், "மும்பை அணிக்காக ஆடியது மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது. அந்த அணியின் மிகப் பெரிய ரசிகன் நான். அதுவும் சச்சின் அவர்களிடம் இருந்து, தொப்பி வாங்கியது, நான் கனவில் கூட நினைத்து பார்க்காத ஒன்று.
சச்சினோட அட்வைஸ் தான் உதவி பண்ணுச்சு
அவருடன் நிறைய நேரம் உரையாடினேன். பிட்ச்சில் அதிக நேரத்தையும் சச்சினுடன் செலவிட்டேன். மேலும், ப்ராபோர்ன் மைதானத்தில் நான் இதுவரை ஆடியதில்லை என்பதால், பிட்ச் தன்மை பற்றியும் சச்சினிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அவர் கொடுத்த நிறைய ஆலோசனைகள், போட்டியின் போது எனக்கு மிகப் பெரிய அளவில் உதவி செய்திருந்தது" என முருகன் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
சச்சினின் அறிவுரை படி, முதல் போட்டியில் செயல்பட்ட முருகன் அஸ்வின், முக்கிய விக்கெட்டுகளை எடுத்து, அதிக ரன்களை விட்டுக் கொடுக்காமல் அசத்தித் தள்ளினார். மும்பை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா கூட, சிறப்பாக பந்து வீச திணறினார். ஆனால், முருகனின் அசாத்தியமான பந்து வீச்சு, மும்பை அணிக்கு பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.
மற்ற செய்திகள்