RRR Others USA

IPL 2022: வாவ்.. MI வீரர் M.அஷ்வினுக்கும் பிரபல கமல், அஜித் படங்களுக்கும் இப்படி ஒரு கனெக்ட் இருக்கா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் போட்டிகள், டாப் கியரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

IPL 2022: வாவ்.. MI வீரர் M.அஷ்வினுக்கும் பிரபல கமல், அஜித் படங்களுக்கும் இப்படி ஒரு கனெக்ட் இருக்கா?

"உணவு பொருள் வாங்கக்கூட மக்கள் வரிசையில் நிற்பது கவலையளிக்கிறது".. ராஜினாமா செய்த இலங்கை அமைச்சர்..!

சனிக்கிழமையான இன்று (02.04.2022) இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி இருந்தது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக, ஜோஸ் பட்லர் சதமடித்து அசத்தி இருந்தார்.

மீண்டும் தோல்வி அடைந்த மும்பை

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியில் இளம் வீரர்கள் இஷான் கிஷான் மற்றும் திலக் ஆகியோர் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். ஆனால், அவர்களின் விக்கெட்டுகள் விழுந்ததும், மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், ராஜஸ்தான் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது.

Murugan ashwin connection with kamal and ajith movies

தமிழக வீரர் முருகன் அஸ்வின்

இதுவரை, 15 ஆவது ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் ஆடியுள்ள மும்பை அணி, இரண்டிலும் தோல்வி அடைந்துள்ளது. முன்னதாக, டெல்லி அணிக்கு எதிரான முதல் போட்டியில், மும்பை அணி தோல்வி அடைந்திருந்தாலும், முதல் முறையாக அந்த அணியில் இணைந்துள்ள தமிழக வீரர் முருகன் அஸ்வின், இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி இருந்தார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும், இனி வரும் போட்டிகளில் நிச்சயம் தன்னுடைய சுழற்பந்து வீச்சால் தாக்கத்தை ஏற்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Murugan ashwin connection with kamal and ajith movies

அஜித், கமல் படங்களுடன் கனெக்ஷன்

இதனிடையே, முருகன் அஸ்வின் மற்றும் நடிகர்கள் அஜித் மற்றும் கமல் ஆகியோரின் படத்துடன் இருக்கும் கனெக்ஷன் குறித்து சுவாரஸ்ய விஷயம் ஒன்று தெரிய வந்துள்ளது. முருகன் அஸ்வினின் தந்தையான இரா. முருகன் தமிழ் எழுத்தாளர் ஆவார். நாவல்கள், கதைகள் மற்றும் கவிதைத் தொகுப்புகள் உள்ளிட்டவற்றை இரா. முருகன் எழுதி உள்ளார்.

Murugan ashwin connection with kamal and ajith movies

பிரபல தமிழ் எழுத்தாளர்

அதே போல, தன்னுடைய புத்தகங்களுக்காக, சில முக்கிய விருதுகளையும் அவர் வென்றுள்ளார். அது மட்டுமில்லாமல், கமல்ஹாசனின் 'உன்னைப் போல் ஒருவன்' மற்றும் அஜித் குமாரின் 'பில்லா 2' ஆகிய திரைப்படங்களுக்கு வசனமும் எழுதி உள்ளார் இரா. முருகன். இந்த இரண்டு படங்களையுமே சக்ரி டொலெட்டி இயக்கி இருந்தார்.

மும்பை அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் முருகன் அஸ்வினின் தந்தை தமிழ் எழுத்தாளர் என்பதும், கமல் மற்றும் அஜித் ஆகியோரின் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள தகவல் பற்றியும் பலருக்கு தற்போது தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல், மே இல்ல.. மார்ச்லயே மண்டையை பிளந்த வெயில்.‌ 122 ஆண்டுகளில் இல்லாத உச்சம்.. வானிலை ஆய்வுமையம் அதிர்ச்சி..!

CRICKET, MURUGAN ASHWIN, KAMAL HAASAN, AJITH KUMAR, IPL2022, ஐபிஎல், முருகன் அஸ்வின்

மற்ற செய்திகள்