சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.. முன்னாள் CSK வீரரின் திடீர் அறிவிப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | திடீர்னு ஒன்று சேர்ந்து இளைஞர்கள் பாடிய பாடல்.. நெகிழ்ச்சிக்குள்ளான திருநங்கை.. வைரல் வீடியோ..!
தமிழ்நாட்டை சேர்ந்த முரளி விஜய் இதுவரையில் இந்தியாவிற்காக 87 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 61 டெஸ்ட் போட்டிகளும், 17 ஒருநாள் போட்டிகளும் 9 டி20 போட்டிகளும் அடக்கம். இந்தியாவுக்காக களமிறங்கி இதுவரையில் 4490 ரன்களை சர்வதேச அரங்கில் குவித்தவர் விஜய். கடைசியாக 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் முரளி விஜய் இடம்பெறவில்லை.
Images are subject to © copyright to their respective owners.
ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய முரளி விஜய் அதிரடி ஆட்டத்திற்கு பெயர்போனவர். சென்னைக்காக விளையாடி 2 சதங்களை அவர் விளாசியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இறுதி போட்டியில் இவர் 95 ரன்கள் அடித்தது ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாதது ஆகும். கடைசியாக 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற முரளி விஜய், தற்போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"இன்று, மிகுந்த நன்றியுடனும் பணிவுடனும், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதை அறிவிக்கிறேன். 2002-2018 வரையிலான எனது பயணம் எனது வாழ்க்கையின் மிக அற்புதமான ஆண்டுகள், ஏனெனில் இந்த ஆண்டுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியது மிக்க மகிழ்ச்சி. விளையாட்டின் மிக உயர்ந்த நிலையாக அதனை கருதுகிறேன். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ), சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் செம்பிளாஸ்ட் சன்மார் எனக்கு வழங்கிய வாய்ப்புகளுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
மேலும், ஒரு கிரிக்கெட் வீரராக இது தனது அடுத்த அத்தியாயம் எனவும் கிரிக்கெட் உலகில் புதிய வாய்ப்புகள் குறித்து ஆராய இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் முரளி விஜய் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
@BCCI @TNCACricket @IPL @ChennaiIPL pic.twitter.com/ri8CCPzzWK
— Murali Vijay (@mvj888) January 30, 2023
மற்ற செய்திகள்