மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் தோல்விகள்.. வறுத்தெடுத்த MI ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் 2022ல் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணி தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. மும்பை அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு (எல்எஸ்ஜி) எதிராக வான்கடே மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 24) நடந்த போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
கேப்டன் கேஎல் ராகுலின் ஆட்டமிழக்காத சதத்தால் சூப்பர் ஜெயண்ட்ஸ் நிர்ணயித்த 169 ரன்களைத் துரத்திய ரோஹித் சர்மா மற்றும் கோ வில், இளம் வீரர் திலக் வர்மா 38 ரன் குவ்த்து துணிச்சலாக சேஸ் செய்ய முயன்றார், ஆனால் மறுமுனையில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் மும்பை தோல்வி அடைந்தது.
இந்த சீசனின் மும்பை விளையாடிய முதல் போட்டியில் டெல்லியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இரண்டாவது போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. மூன்றாவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடமும். நான்காவது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடமும் தோல்வியடைந்தது.
ஐந்தாவது போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியும், ஆறாவது போட்டியில் லக்னோ அணியும் மும்பையை வீழ்த்தின. ஏழாவது போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடம் தோற்ற நிலையில், நேற்று நடைபெற்ற லக்னோவிற்கு எதிரான எட்டாவது போட்டியிலும் மும்பை அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
இதற்கிடையில், மும்பை அணியின் இந்த மோசமான செயல்பாட்டிற்குப் ரசிகர்கள் அணியை சமூக வலைதளங்களில் பெரிதும் ட்ரோல் செய்தனர். குறிப்பாக இஷான் கிசனின் பேட்டிங்கில் 20 பந்துகளை திண்றது, மும்பை அணி வீரர்கள் ஆர்வமில்லாமல் முனைப்பில்லாமல் ஆடுவது குறித்தும் ரசிகர்கள் கவலையுடன் பதிவிட்டுள்ளனர்.
இஷான், பொல்லார்ட் அடுத்த போட்டிகளில் ஆட வாய்ப்பளிக்க கூடாது என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 2022ல் மிக மோசமான ஆட்டத்தை மும்பை அணி வெளிப்படுத்துவதாகவும் சில ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் கராச்சி அணி போல மும்பை அணி செயல்படுவதாக ஒரு ரசிகர் விமர்சித்துள்ளார்.
ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மற்ற செய்திகள்