‘மேட்ச்ச மாத்துன அந்த ஒரு ஓவர்’…’கிரவுண்ட்டுக்கு ஓடி வந்த ரோஹித் ஷர்மா’ – குட்டி டிவில்லியர்ஸின் ’தெறி’ இன்னிங்ஸ்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நேற்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களின் ஐந்தாவது தொடர் தோல்வியை சந்தித்தது.

‘மேட்ச்ச மாத்துன அந்த ஒரு ஓவர்’…’கிரவுண்ட்டுக்கு ஓடி வந்த ரோஹித் ஷர்மா’ – குட்டி டிவில்லியர்ஸின் ’தெறி’ இன்னிங்ஸ்

Also Read | பிரேக் அப் பண்ணும் அளவுக்கு வயதான கப்பிள்ஸ் இடையே வந்த சண்டை.. போலீஸாரின் செயலால் அடுத்த நொடி நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.!

தொடர்ந்து ஐந்தாவது தோல்வி…

நடப்பு ஐபிஎல் தொடர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மோசமான தொடராக  அமைந்துள்ளது. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் கூட மும்பை அணி வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நேற்றைய பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியிலும் கடைசி வரை போராடி தோல்வியை தழுவியது.

நேற்றைய போட்டியில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 5 விக்கெட்களை இழந்து 198 ரன்களை சேர்த்தது. அந்த அணியின் தவான் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் அரைசதமடித்தனர். இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 186 ரன்கள் சேர்த்து 12 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை இழந்தது.

திருப்புமுனை ஓவர்…

இந்த போட்டியை மும்பை இந்தியன்ஸ் அணி இழந்தாலும் ரசிகர்களைக் கவர்ந்த ஒரு இன்னிங்ஸை 18 வயது மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான டிவால்ட் பிரவிஸ் விளையாடினார்.  இந்த இன்னிங்ஸில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன்ரேட் மிகவும் கம்மியாக சென்று கொண்டிருந்த போது ராகுல் சஹார் வீசிய ஓவரில் தான் சந்தித்த ஐந்து பந்துகளையும் பவுண்டரிக்கௌ பறக்க விட்டார். அதில் ஒரு ஃபோரும், அடுத்தடுத்து நான்கு தொடர் சிக்ஸர்களும் அடக்கம். இந்த ஓவருக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அதிரடியை தொடங்கி ரன் ரேட்டை கிடுகிடுவென ஏற்றியது.

Mumbai Indians player dewald brevis super shocking innings against PKB

பிரவிஸின் இந்த இன்னிங்ஸைப் பார்த்து பவர் ப்ளே இடைவேளையில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாவே மைதானத்துக்குள் வந்து அவரிடம் பேசிவிட்டு சென்றார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக பிரவிஸ் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த வீரர்கள் போராடி 186 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.

Mumbai Indians player dewald brevis super shocking innings against PKB

யார் இந்த பிரவிஸ்…

தென் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த டிவால்ட் பிரவிஸ் சமீபத்தில் நடந்த  19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.  அந்த தொடரில் அவர் 84 ரன்கள் சராசரியில் 506 ரன்கள் சேர்த்துக் கலக்கினர். இவரின் ஷாட் ஆடும் முறைகள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் டிவில்லியர்ஸ் போலவே இருப்பதால் இவரை தென்னாப்பிரிக்க ரசிகர்கள் ‘குட்டி டிவில்லியர்ஸ்’ என்றே அழைத்து வருகின்றனர்.

Also Read | விண்வெளியில் இதுவரை கண்டுபிடிச்சதுலயே இதுதான் பெருசு.. நாசா வெளியிட்ட புகைப்படம் வைரல்..

CRICKET, IPL, MUMBAI INDIANS, DEWALD BREVIS, PKBS, MI VS PKBS, IPL 2022

மற்ற செய்திகள்