“நீ இப்டியே பண்ணிட்டு இருந்தா.. விளையாட சான்ஸ் தரமாட்டாங்க”.. ஹர்திக் சொன்ன அந்த அட்வைஸ்.. இஷான் கிஷன் உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் இஷன் கிஷன், ஹர்திக் பாண்ட்யா சொன்ன அறிவுரை குறிந்து பகிர்ந்துள்ளார்.
ஐபில் தொடரின் 14-வது லீக் போட்டி இன்று (06.04.2022) புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 52 ரன்களும், திலக் வர்மா 38 ரன்களும், பொல்லார்டு 22 ரன்களும் எடுத்தனர். கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் இஷன் கிஷன் தனக்கு ஹர்த்திக் பாண்ட்யா கூறிய அறிவுரை குறித்து பகிர்ந்துள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்ற இஷான் கிஷன் தொடர்ந்து அந்த அணியில் விளையாடி வருகிறார். ஆரம்பத்தில் ஐபிஎல் தொடரில் சீரியஸாக எடுக்காமல், வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு முறையை இஷான் கிஷன் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாற்று எழுந்தது. அதனால் அவருக்கு ப்ளேயிங் லெவனில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தது. அப்போது ஹர்திக் பாண்ட்யா தனக்கு சில அறிவுரைகளை கூறியதாக இஷான் கிஷன் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய இஷான் கிஷன், ‘நீ இதே மாதிரி செய்துகொண்டிருந்தால் உனக்கு போட்டியில் விளையாட வாய்ப்பு தரமாட்டார்கள் என ஹர்திக் பாண்ட்யா கூறினார். பின்னர் உடற்பயிற்சி செய்வது எப்படி, உடலை எப்படி கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என ஹர்திக் என சொல்லிக் கொடுத்தார். அதேபோல் க்ருணால் பாண்ட்யாவும் எனக்கு நிறைய உதவி செய்தார். எனக்கு தெரியாத பல விஷயங்களை இவர்கள் இருவரும்தான் கற்றுக் கொடுத்தனர்’ என இஷான் கிஷன் கூறியுள்ளார். இன்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளை எதிர்கொண்ட இஷான் கிஷன் 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்