"இத மட்டும் பண்ணுவீங்களா??.." ட்விட்டரில் 'ரசிகர்' வைத்த 'கோரிக்கை'... இரண்டே வார்த்தையில் 'மும்பை இந்தியன்ஸ்' போட்ட 'ட்வீட்'... வேற லெவல் 'வைரல்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் ஏலம் கடந்த 18 ஆம் தேதி சென்னையில் வைத்து நடந்து முடிந்த நிலையில், இதில் ஆல் ரவுண்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களை எடுக்க, அனைத்து அணியினருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
இதில், ஐபிஎல் தொடரில் ஏற்கனவே பலம் வாய்ந்த அணியாக விளங்கும் மும்பை இந்தியன்ஸ் அணி, பியூஷ் சாவ்லா, அர்ஜுன் டெண்டுல்கர் உள்ளிட்ட சில வீரர்களை ஏலத்தில் வாங்கியது. ஐபிஎல் ஏலம் சிறப்பாக முடிவடைந்துள்ளதால் அனைத்து அணிகளின் ரசிகர்களும் எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என்பதை எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி செய்துள்ள ட்வீட் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. முன்னதாக, மும்பை அணி ஹிந்தியில் செய்திருந்த ட்வீட் ஒன்றின் கீழ், அந்த அணியின் ரசிகர் ஒருவர், 'குறைந்தபட்சம் ஒரு டீவிட்டையாவது நீங்கள் தமிழில் செய்வீர்களா?' என கமெண்ட் செய்திருந்தார்.
கண்டிப்பா மச்சான் 💙 https://t.co/arLrlV2M5R
— Mumbai Indians (@mipaltan) February 26, 2021
இதற்கு பதிலளித்த மும்பை இந்தியன்ஸ் அணி, 'கண்டிப்பாக மச்சான்' என ட்வீட் செயதுள்ளது. மும்பை அணியின் இந்த ட்வீட் தற்போது ரசிகர்களிடையே அதிகம் வைரலாகி வருகிறது. பொதுவாக, ஐபிஎல் சமயங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் அதன் வீரர்கள் சிலர் தான், தமிழில் ட்வீட் செய்வது வழக்கம். தற்போது அதே போன்று ஒரு செயலை மும்பை இந்தியன்ஸ் அணி செய்துள்ளது, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்