'கொல்கத்தா இப்படி ஒரு பிளான் போடுவாங்கன்னு நாங்க நினைக்கல'... 'இங்குதான் சொதப்பினோம்'... உடைந்துபோன ரோஹித்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மும்பை அணியின் தோல்வி குறித்து அந்த அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

'கொல்கத்தா இப்படி ஒரு பிளான் போடுவாங்கன்னு நாங்க நினைக்கல'... 'இங்குதான் சொதப்பினோம்'... உடைந்துபோன ரோஹித்!

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இதில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 15.1 ஓவரிலே 3 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Mumbai Indians Failed To Capitalise On Good Start: Rohit Sharma

இந்த தோல்வி கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இதனால் போட்டிக்குப் பின்னர் மிகவும் சோர்வுடன் காணப்பட்ட  ரோஹித், மும்பை அணியின் தோல்வி குறித்துப் பேசினார். ''உண்மையிலேயே 2 போட்டிகளிலும் நாங்கள் சொதப்பி விட்டோம். நேற்றைய போட்டியில்  பவுலிங் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் கொல்கத்தா அணி வீரர்களான ஷுப்மன் கில், வெங்கடேஷ் அய்யர், ராகுல் திரிபாதி ஆகியோர் போட்டியை வேற லெவலுக்கு கொண்டு சென்று விட்டார்கள்.

நேற்றைய ஆட்டம் என்பது இது அந்த அணியின்  பயிற்சியாளராக உள்ள மெக்கல்லமின் பக்கா பிளான். அதை அவர்கள் கச்சிதமாகச் செயல்படுத்தி விட்டார்கள். எங்கள் தொடக்கம் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் கடைசி ஓவர்களில் எங்களால் அடிக்க முடியவில்லை. நல்ல தொடக்கத்தைக் கடைசி நல்ல மூலதனமாக மாற்ற முடியாமல் போனது.

Mumbai Indians Failed To Capitalise On Good Start: Rohit Sharma

இன்னும் அட்டவணையின் நடுப்பகுதியில் தான் இருக்கிறோம். ஆனால் மீண்டும் தொடர் வெற்றிகளைப் பெறுவது என்பது மிகவும் அவசியம். கடந்த காலங்களிலும் இதுபோன்ற நிலையிலிருந்து மீண்டு வந்துள்ளோம். எனவே ஒன்றிணைந்து அடுத்த போட்டியில் எங்கள் முழு திறனைக் காட்டுவோம்'' என ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்