‘அவருக்காக இந்த 2 பேர்ல ஒருவர்தான் வெளியேறணும்’... ‘ரொம்ப பிரேக் இருக்கறதுனால் டவுட்தான்’... ‘ரோகித் சர்மா குறித்து எம்எஸ்கே பிரசாத்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ரோகித் சர்மா, பேட்டிங் வரிசையில் எந்த இடத்தில் இறங்குவார் என்று கேள்வி எழுந்துள்ளது.

‘அவருக்காக இந்த 2 பேர்ல ஒருவர்தான் வெளியேறணும்’... ‘ரொம்ப பிரேக் இருக்கறதுனால் டவுட்தான்’... ‘ரோகித் சர்மா குறித்து எம்எஸ்கே பிரசாத்’...!!!

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்று சமமாக உள்ளன. இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான 3-வது போட்டி வரும் 7-ம் தேதி சிட்னியில் துவங்கவுள்ளது. காயம் காரணமாக ஒருநாள், டி20 மற்றும் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காத ரோகித் சர்மா தற்போது 3-வது போட்டியில் பங்கேற்று விளையாடவுள்ளார்.

இதையொட்டி தனது குவாரன்டைனை நாட்களை முடித்துவிட்டு நேற்றைய தினம் அவர் இந்திய அணியில் மீண்டும் இணைந்துள்ளார். இந்நிலையில் ரோகித் சர்மாவுக்கு நீண்ட பிரேக் உருவாகியுள்ளதால் மீண்டும் துவக்க வீரராக களமிறங்குவது சந்தேகம்தான் என்று முன்னாள் தலைமை தேர்வாளர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

MSK Prasad on Rohit Sharma’s Place in Playing XI in 3rd test

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத், ‘ரோகித் சர்மா அணிக்குள் நுழைவதால், மயங்க் அகர்வால் மற்றும் விஹாரி ஆகிய இருவரில் ஒருவர் நீக்கப்படுவார். கடந்த ஒன்றரை ஆண்டில் டெஸ்ட் போட்டிகளில் சதம் மற்றும் இரட்டை சதம் அடித்து அசத்திய மயங்க் அகர்வால்நீக்கப்பட்டால், அது மிகக்கடினமான முடிவாக இருக்கும்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட்டில் ஆடவுள்ள ரோகித் சர்மா தொடக்க வீரராக இறங்க விரும்புவாரா? அல்லது மிடில் ஆர்டரில் இறங்குவாரா என்பது கேள்வியாக உள்ளது.  என்ன மாதிரியான ரோலை அணி நிர்வாகம் அவருக்கு வழங்கவுள்ளது என்று பார்க்க வேண்டும். ரோகித்திடமிருந்து அணி நிர்வாகம், அதிரடியான தொடக்கத்தை எதிர்பார்க்கிறதா அல்லது மிடில் ஆர்டரில் நிலைத்து ஆட வைக்க விளைகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது. அவர் எந்த இடத்தில் விளையாடுவார் என்பதை அவரும், அணியும்தான் சூழ்நிலைக்கு ஏற்ப தீர்மானிக்க வேண்டும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்