IPL 2023 : சிஎஸ்கேல ஜடேஜா ஆடுவாரா, மாட்டாரா?.. தோனியின் விருப்பம் இது தான்.. தீயாய் பரவும் தகவல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடி 20 உலக கோப்பை தொடர் சிறப்பாக நடைபெற்று வரும் அதே வேளையில், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறித்து தற்போது இணையத்தில் வெளியாகி உள்ள தகவல் ஒன்று அதிகம் வைரலாகி வருகிறது.
2021 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2022 ஆம் ஆண்டு தொடரில் 9 ஆவது இடத்தை பிடித்து லீக் சுற்றுடன் வெளியேறி இருந்தது.
இந்த தொடருக்கு முன்பாக கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி கொள்ள, சிஎஸ்கேவின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டிருந்தார்.
இதனிடையே, தொடருக்கு நடுவே மீண்டும் கேப்டனாக தோனி நியமிக்கப்பட, காயம் காரணமாக சீசனின் பாதியில் இருந்தும் ஜடேஜா விலகி இருந்தார். பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் சிஎஸ்கே, 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிறந்த முறையில் கம்பேக் கொடுக்கும் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
இதற்கு மத்தியில் சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா அடுத்த சீசனில் ஆடமாட்டார் என்றும் சில தகவல்கள் வலம் வந்த வண்ணம் இருந்தது. மேலும், வரும் டிசம்பர் மாதம் ஐபிஎல் ஏலத்தை நடத்த பிசிசிஐ திட்டம் போட்டதாக தகவலும் வெளியாகி இருந்தது. இதற்கு முன்பாக, ட்ரேடிங் முறையில் அல்லது அணியில் இருந்து விடுவிக்க விரும்பும் வீரர்களள் பட்டியலை அனைத்து அணிகளும் சமர்ப்பிக்கும் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.
அந்த வகையில், ஜடேஜாவை வேறு அணிக்கு ட்ரேடிங் செய்ய சிஎஸ்கே முடிவு செய்திருப்பதாக முதலில் தகவல்கள் வெளியாகி இருந்தது. இதன் பின்னர், ஜடேஜா தொடர்ந்து சிஎஸ்கே அணியில் நீடிப்பார் என்றும் தகவல் பரவி வந்தது.
இந்த நிலையில், சிஎஸ்கே அணியில் ஜடேஜா தொடர்ந்து நீடிப்பது குறித்து தோனி ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளதாக தகவல் ஒன்று கிரிக்கெட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது. சிஎஸ்கேவில் ஜடேஜா ஆடி வரும் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் ஜடேஜாவின் திறமை மீது தோனி அதிக நம்பிக்கை வைத்திருப்பதாலும் அவர் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என தோனி விரும்பி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
ஜடேஜா அணியில் நீடிப்பது குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வரும் நிலையில், நிச்சயம் அவர் சிஎஸ்கே அணிக்காக ஆடுவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Also Read | ஒரே ஓவரில்.. நியூசிலாந்து அணிக்கு ஷாக் கொடுத்த அயர்லாந்து 'வீரர்'.. "பந்து ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம்"
மற்ற செய்திகள்