‘ஆரம்பமே 2 புதிய உலக சாதனை..’ உலகக் கோப்பையில் மாஸ் காட்டிய ‘தல’ தோனி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இரண்டு புதிய உலக சாதனைகளைப் படைத்துள்ளார் இந்திய வீரர் மகேந்திர சிங் தோனி.

‘ஆரம்பமே 2 புதிய உலக சாதனை..’ உலகக் கோப்பையில் மாஸ் காட்டிய ‘தல’ தோனி!

சவுதாம்டன் நகரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி சதமடித்தார். 47.3 ஓவர்களில் வெற்றி இலக்கான 228 ரன்களை எட்டி இந்தியா உலகக் கோப்பையில் முதல் வெற்றியைப் பெற்றுள்ளது.

இந்தப் போட்டியின் மூலம் தோனி 600 சர்வதேச இன்னிங்ஸில் விக்கெட் கீப்பராக செயல்பட்ட முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த வரிசையில் அவருக்கு அடுத்தபடியாக பவுச்சர் (596), சங்ககாரா (499), கில்கிறிஸ்ட் (485) ஆகியோர் உள்ளனர். தற்போது இவர்கள் அனைவரும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக, 39.3ஆவது ஓவரில் தென் ஆப்பிரிக்காவின் பெலுக்வயோவை ஸ்டெம்பிங் செய்ததன்மூலம் தோனி 139 லிஸ்ட் ஏ ஸ்டெம்பிங் செய்து சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் உலகக் கோப்பையில் விக்கெட் கீப்பராக அதிக டிஸ்மிஸல் செய்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த வரிசையில் சங்ககாரா (54), கில்கிறிஸ்ட் (52), தோனி (33), மெக்கலம் (32), பவுச்சர் (31) ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர்.

ICCWORLDCUP2019, SAVSIND, DHONI, WORLDRECORD