VIDEO: ‘பாய் இன்னைக்கு எனக்கு பிறந்த நாள்.. சரி அதுக்கு..!’ டாஸ் போட்ட பின் ரிஷப் பந்த் செஞ்ச குறும்பு.. ‘செம’ வைரல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியுடன் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் குறும்பாக விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: ‘பாய் இன்னைக்கு எனக்கு பிறந்த நாள்.. சரி அதுக்கு..!’ டாஸ் போட்ட பின் ரிஷப் பந்த் செஞ்ச குறும்பு.. ‘செம’ வைரல்..!

ஐபிஎல் (IPL) தொடரின் 50-வது லீக் போட்டி இன்று (04.10.2021) துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், ரிஷப் பந்த் (Rishabh Pant) தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

MS Dhoni-Rishabh Pant’s bromance ahead of DC vs CSK goes viral

இதுவரை இரு அணிகளும் 12 போட்டிகளில் விளையாடி 9-ல் வெற்றி பெற்றுள்ளன. இதில் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலும், டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது. மேலும் இரு அணிகளும் ப்ளே ஆஃப் (Playoffs) சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

MS Dhoni-Rishabh Pant’s bromance ahead of DC vs CSK goes viral

இன்றைய போட்டியில் வெற்றி பெரும் அணி முதல் இடத்தை தக்க வைத்துக்கொள்ளும். ஒருவேளை ப்ளே ஆஃப் சுற்றில் தோல்வி அடைந்தால் மீண்டும் ஒரு போட்டியில் விளையாடி தகுதி பெற வாய்ப்பு கிடைக்கும். அதனால் இரு அணிகளும் இப்போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MS Dhoni-Rishabh Pant’s bromance ahead of DC vs CSK goes viral

இந்த நிலையில், டாஸ் போட்டதற்கு பின் தோனியிடம் ரிஷப் பந்த் குறும்பாக விளையாடிய வீடியோ வெளியாகியுள்ளது. டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் இன்று தனது 24-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதனால் பிறந்தநாள் பரிசாக தோனியிடம் அவரது கைக்கடிகாரத்தை கேட்பது போல் பேசினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை அடுத்து டாஸ் வென்றபின் பேசிய ரிஷப் பந்த், ‘எப்பொழுதும் தோனியிடம் இருந்து சிறந்த விஷயங்களை கற்றுக்கொள்வேன். ஆனால் இன்று அவருக்கு எதிராக விளையாட இருக்கிறேன். அதனால் போட்டியில் கவனம் செலுத்த உள்ளேன்’ என அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்