பிரஸ்மீட் வைத்து 'ஓய்வை' அறிவிக்கும் தோனி?.. கோலியின் 'ட்வீட்'டால் கலவர பூமியான ட்விட்டர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் கேப்டனும்,கிரிக்கெட் வீரருமான தோனி இன்றிரவு பிரஸ்மீட் வைத்து தனது ஓய்வு குறித்து அறிவிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய அணிக்கு 28 வருடங்கள் கழித்து உலகக்கோப்பை பெற்றுத்தந்தவர். களத்தில் கடைசிவரை நின்று போராடக் கூடியவர், விக்கெட் கீப்பராக அதிக டிஸ்மிஸல்கள் செய்தவர்,கூல் கேப்டன், T-20, 50 ஓவர், டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்து விதமான போட்டிகளிலும் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர் தோனி.
உலகக்கோப்பை தொடருக்கு பின் நடந்த வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்னால், தான் இரண்டு மாத காலம் ஓய்வில் செல்வதாக பிசிசிஐ-யிடம் கூறி விட்டு இரு வாரங்கள் இராணுவத்துடன் செலவிட்டார் தோனி.
அடுத்து நடைபெற உள்ள தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் தோனிக்கு இடம் அளிக்கப்படவில்லை. இதுகுறித்து தேர்வுக் குழு தலைவர், தோனி இளம் வீரர்களை தேர்வு செய்ய சொன்னார் என கூறினார்.
இந்த நிலையில் விராட் கோலியின் ட்வீட்டால் ட்விட்டர் தற்போது பற்றியெறிய ஆரம்பித்துள்ளது. அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தோனியின் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து மறக்க முடியாத புகைப்படம் என தெரிவித்து இருந்தார். இதனைப்பார்த்த ரசிகர்கள் தோனி தனது ஓய்வு முடிவை அறிவிக்கப் போகிறாரா? என கேள்வி எழுப்பினர்.
தற்போது இந்தியளவில் முதலிடத்தில் தோனி ட்ரெண்டாகி வருகிறார். அவர் குறித்த சாதனைகள், நினைவுகள் என பலவற்றையும் ரசிகர்கள் பகிர்ந்து ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டாம் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மறுபுறம் இன்று இரவு 7 மணிக்கு பிரஸ்மீட் வைத்து தோனி தனது கிரிக்கெட் ஓய்வினை முறைப்படி அறிவிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்துத்தான் கோலி, தோனி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் என்று ரசிகர்கள் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.