மேட்ச் 'பினிஷ்' பண்றதுக்கு முன்னாடி.. களத்தில் தோனி செஞ்ச மேஜிக்.. "அட, இத நெறய பேரு கவனிக்காம விட்டுருப்பாங்களே.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் தொடரின் 33 ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி இருந்த நிலையில், கடைசி பந்தில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றிருந்தது.

மேட்ச் 'பினிஷ்' பண்றதுக்கு முன்னாடி.. களத்தில் தோனி செஞ்ச மேஜிக்.. "அட, இத நெறய பேரு கவனிக்காம விட்டுருப்பாங்களே.."

இந்த போட்டியில், டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தது. அதன்படி ஆடிய மும்பை அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்திருந்தது.

தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய சிஎஸ்கே, அடுத்தடுத்து சில விக்கெட்டுகளை இழந்ததும் போட்டி கைவிட்டு போனதாகவே சில சிஎஸ்கே ரசிகர்கள் கருதினர். அப்படி இருக்கும் நிலையில், உத்தப்பா 30 ரன்களும், ராயுடு 40 ரன்களும் எடுத்து ஓரளவுக்கு நம்பிக்கை சேர்த்தனர்.

Vintage தோனி'ய பாத்துட்டோம்..

கடைசி மூன்று ஓவர்களில், சென்னை அணியின் வெற்றிற்கு 42 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த தோனி மற்றும் ப்ரெட்டோரியஸ் ஆகியோர், கிடைத்த பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சருக்கு அனுப்ப, இரண்டு ஓவர்களில் 25 ரன்கள் சேர்த்தனர். இதனால், கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்தில் ஒரு ரன் சேர்க்கப்பட, கடைசி நான்கு பந்தில், 6, 4, 2, 4 என அடித்த தோனி, அசத்தலாக போட்டியை முடித்து வைத்தார். 

ms dhoni placement of fielder to dismiss pollard

Vintage தோனியை பார்த்த குஷியில், ரசிகர்கள் தொடர்ந்து தோனி குறித்து மீம்ஸ் மற்றும் கருத்துக்களை அதிகம் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இதனிடையே, போட்டியை முடித்து வைப்பதற்கு முன்னர், தோனி செய்திருந்த ஒரு மேஜிக்கும், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

களத்தில் செய்த மேஜிக்..

மும்பை அணி பேட்டிங் செய்த போது, 85 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த பொல்லார்ட், ஆரம்பத்தில் பவுண்டரி மற்றும் சிக்ஸர் ஒன்றை விரட்டினார். நிச்சயம் அவர் களத்தில் அதிக நேரம் நின்றால், மும்பை அணி நல்ல ஸ்கோரை எட்டும் என்பது அனைவருக்குமே தெரியும். இதனால், அவரை ஆட்டமிழக்கச் செய்ய வேண்டி, தோனி ஒரு அசத்தல் பிளான் ஒன்றை போட்டார்.

ms dhoni placement of fielder to dismiss pollard

அதன்படி, மஹீஸ் தீக்ஷனா வீசிய 17 ஆவது ஓவரில், இரண்டாவது பந்தினை பொல்லார்ட் எதிர்கொண்டார். அந்த சமயத்தில், பவுண்டரி லைனுக்கு நேராக ஒரு ஃபீல்டரை தோனி நிற்க வைத்தார். தொடர்ந்து, தீக்ஷனா பந்தினை பொல்லார்ட் தூக்கி அடிக்க, நேராக தோனி செட் செய்த ஃபீல்டர் துபேவின் கைகளில் கேட்சாக மாறி இருந்தது. இதனால், 14 ரன்களில் பொல்லார்ட் அவுட்டாகி வெளியேறினார்.

ms dhoni placement of fielder to dismiss pollard

பத்து வருஷத்துக்கு முன்னாடி..

கடந்த 2010 ஆம் ஆண்டு, ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி, இன்று சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதி இருந்த இதே DY பாட்டில் மைதானத்தில் தான் நடைபெற்றிருந்தது. அப்போதும் அதிரடி காட்டிய பொல்லார்டை வீழ்த்த, சர்க்கிளுக்குள் நேராக ஒரு ஃபீல்டரை நிறுத்தி அவுட் செய்திருந்த தோனி, கோப்பையையும் கைப்பற்ற உதவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு… https://www.behindwoods.com/bgm8/

MSDHONI, RAVINDRA JADEJA, CHENNAI-SUPER-KINGS, IPL, POLLARD, IPL 2022, CSK VS MI, பொல்லார்ட், எம்.எஸ். தோனி

மற்ற செய்திகள்