"நான் 10-வது பாஸ் பண்ணமாட்டேன்னு எங்கப்பா நெனச்சாரு".. மாணவியின் கேள்விக்கு தோனி சொன்ன சுவாரஸ்ய பதில்.. Cool வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனி தனது பள்ளிக்கால வாழ்க்கை குறித்து மாணவர்களுடன் பகிர்ந்துகொண்ட வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

"நான் 10-வது பாஸ் பண்ணமாட்டேன்னு எங்கப்பா நெனச்சாரு".. மாணவியின் கேள்விக்கு தோனி சொன்ன சுவாரஸ்ய பதில்.. Cool வீடியோ..!

Also Read | டக்குனு காரை நிறுத்தி கீழே இறங்கிய பிரதமர் மோடி.. முதியவர் கொடுத்த அன்பு பரிசு.. வைரலாகும் வீடியோ..!

தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். 2004 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டுவரை இந்தியாவிற்காக 90 டெஸ்ட் 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடி மொத்தம் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்தவர் தோனி. இவரது தலைமையில் ஒருநாள் மற்றும் T20 போட்டி உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. பரபரப்பான மேட்ச்களிலும் பொறுமையுடன் வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்வதால் ரசிகர்கள் இவரை 'மிஸ்டர் கூல்' என்றும் 'தல' என்றும் அன்போடு அழைக்கிறார்கள்.

MS Dhoni on his Class 10 board exam and his school life

மைதானம்

2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் உள்ள தோனிக்கு சொந்தமான எம்.எஸ் தோனி குளோபல் ஸ்கூல்-ல் அமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் நேற்று திறக்கப்பட்டது. இந்த மைதானத்தை திறந்துவைத்த தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான குளோபல் பள்ளியின் இணைப்பு குறித்த அறிவிப்பையும் வெளியிட்டார்.

பிடித்த பாடம்

அப்போது, மாணவர்களின் கேள்விக்கு தோனி பதில் கூறினார். அந்த நிகழ்வில் மாணவி ஒருவர் தோனியிடம்,"பள்ளியில் உங்களுக்கு பிடித்த பாடம் எது.? பள்ளியில் நீங்கள் எப்படிப்பட்ட மாணவர்?" எனக் கேட்டார். இதற்கு பதில் அளித்த தோனி,"விளையாட்டு பாடங்களின் வரிசையில் வருமா? பள்ளியில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். நான் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறமாட்டேன் என எனது தந்தை நினைத்தார். ஆனால், நான் தேர்ச்சி அடைந்ததை அறிந்து மிகவும் சந்தோஷப்பட்டார். நான் 7 ஆம் வகுப்பில் முதன்முறையாக விளையாட்டில் ஈடுபட துவங்கியவுடன் எனது வருகை பதிவு குறைந்தது. அதற்கு முன்பும் நான் சராசரி மாணவன் தான்.

MS Dhoni on his Class 10 board exam and his school life

"பத்தாம் வகுப்பில் 66 சதவீத மதிப்பெண் எடுத்தேன். 12 ஆம் வகுப்பில் 56 அல்லது 57 சதவீதம் எடுத்திருந்தேன். நான் விளையாட்டிலேயே ஆர்வமாக இருந்ததால் எனது வருகை சதவீதம் குறைந்துவிட்டது. 10 ஆம் வகுப்பு படங்களில் சிலவற்றை நான் வாசித்ததே இல்லை. அதில் இருந்து கேள்வி கேட்கப்பட்டால் என்ன ஆகும்? என தோன்றும். அந்த காலகட்டம் அப்படி மோசமாக இருந்தது" என்றார்.

 

Also Read | கோவிலில் தன்னை மறந்து பாடும் சிறுவன்.. சொக்கிப்போய் நின்ன பக்தர்கள்.. மலைக்க வைக்கும் மழலையின் வீடியோ..!

MSDHONI, SCHOOL LIFE, MS DHONI ON HIS CLASS 10 BOARD EXAM, CLASS 10TH BOARD EXAM

மற்ற செய்திகள்