"பிரஷர்-அ எப்படி சமாளிக்கிறீங்க?".. தல தோனி சொன்ன ரெண்டே விஷயம்.. என்ன இவ்ளோ சிம்பிளா முடிச்சிட்டாரு.. தெறி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரான தோனி பேசும் வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.
தல தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். 2004 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டுவரை இந்தியாவிற்காக 90 டெஸ்ட் 350 ஒருநாள் மற்றும் 98 டி20 போட்டிகளில் ஆடி மொத்தம் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ரன்களை குவித்தவர் தோனி. இவரது தலைமையில் ஒருநாள் மற்றும் T20 போட்டி உலகக்கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. பரபரப்பான மேட்ச்களிலும் பொறுமையுடன் வெற்றியை நோக்கி அணியை அழைத்துச் செல்வதால் ரசிகர்கள் இவரை 'மிஸ்டர் கூல்' என்றும் 'தல' என்றும் அன்போடு அழைக்கிறார்கள்.
2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த தோனி, தொடர்ந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடர் துவங்கிய 2008 ஆம் ஆண்டில் இருந்து சென்னை அணியின் கேப்டனாகவும் தோனி தொடர்கிறார். 2010 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தன்னுடைய தோழியான சாக்ஷியை தோனி திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஸிவா என பெயர்சூட்டினர் தோனியும் அவரது மனைவியும்.
வீடியோ
பொதுவாக தோனியின் பிரதானமான குணம் எந்த சூழ்நிலையிலும் மிகவும் பொறுமையுடன் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி செல்வதே. பேட்டிங் செய்யும் போதும் சரி, கையில் கிளவ்ஸ் உடன் ஸ்டம்புகளுக்கு பின்புறம் நிற்கும் போதும் சரி, அவருடைய இலக்கு வெற்றியாக மட்டுமே இருக்கும். இந்நிலையில், தோனி பேசும் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதில், ரசிகர் ஒருவர்,"பிரஷரையும் உங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களையும் எப்படி எதிர்கொள்கிறீர்கள்?" எனக் கேட்கிறார்.
இதற்கு பதில் அளிக்கும் தோனி,"அது மிகவும் எளிமையானது. செய்தித் தாள்களை வாசிக்க கூடாது. தொலைக்காட்சி பார்க்க கூடாது" என சிரித்துக்கொண்டே சொல்கிறார். இதனை கேட்டு அங்கிருந்த ரசிகர்கள் ஆராவரம் செய்கின்றனர். தற்போது வைரலாக பரவி வரும் இந்த வீடியோ எப்போது? எங்கு எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை.
Savage @MSDhoni 😂❤️💥pic.twitter.com/j6Di2r6Ozd
— DHONI Era™ 🤩 (@TheDhoniEra) October 26, 2022
மற்ற செய்திகள்