இன்னைக்கு டிரெண்டே ‘தல’ ஹேர் ஸ்டைல்தான்.. யாருப்பா அந்த ஹேர் ஸ்டைலிஷ்ட்?.. வெளியான ‘சுவாரஸ்ய’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

புதிய ஹேர் ஸ்டைலில் இருக்கும் தோனியின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்னைக்கு டிரெண்டே ‘தல’ ஹேர் ஸ்டைல்தான்.. யாருப்பா அந்த ஹேர் ஸ்டைலிஷ்ட்?.. வெளியான ‘சுவாரஸ்ய’ தகவல்..!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் தலைமையிலான இந்திய அணி பல வரலாற்று சாதனைகளை படைத்துள்ளது. குறிப்பாக 2007-ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை, 2011-ம் ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2013-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் டிராபி ஆகிய கோப்பைகளை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது. இதன்மூலம் ஐசிசி நடத்தும் இந்த 3 கிரிக்கெட் தொடர்களிலும் கோப்பையை கைப்பற்றிய ஒரே கேப்டன் என்ற பெருமையை தோனி பெற்றுள்ளார்.

MS Dhoni new haircut goes viral on social media

இந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். யாரும் எதிர்பார்க்காத வகையில் வெளியான இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் தொடரில் தோனி தொடர்ந்து விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சார்பாக நீண்ட காலமாக அவர் விளையாடி வருகிறார்.

MS Dhoni new haircut goes viral on social media

இதனிடையே இந்தியாவில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்ற கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகின்றனர். ஆனால் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் குடும்பத்துடன் சிம்லா சென்று வந்தார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், தற்போது புது ஹேர் ஸ்டைலில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த ஹேர் ஸ்டைலை, மும்பையைச் சேர்ந்த பிரபல ஹேர் ஸ்டைலிஷ்ட் அலீம் ஹக்கீம் என்பவர் வடிமைத்துள்ளார்.

MS Dhoni new haircut goes viral on social media

இவர் பாலிவுட் நடிகர்களான சஞ்சய் தத், ரன்பீர் கபூர், ரன்வீர் சிங் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஹேர் ஸ்டைல் செய்துள்ளார். அதேபோல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, சஹால் என பலருக்கும் இவர் ஹேர் ஸ்டைல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்