"IPL வரலாற்றுலேயே அவர் தான் பெஸ்ட் பிளேயர்".. கிரிக்கெட் ஜாம்பவான்கள் கைகாட்டிய வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் வரலாற்றிலேயே சிறந்த வீரர் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் பேசி இருக்கின்றனர்.

"IPL வரலாற்றுலேயே அவர் தான் பெஸ்ட் பிளேயர்".. கிரிக்கெட் ஜாம்பவான்கள் கைகாட்டிய வீரர்..!

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | "அந்த மொமெண்ட்-க்கு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்".. பிக்பாஸ் கதிரவன் EXCLUSIVE..!

இந்தியா முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களை எப்போதும் கவர்ந்து இழுப்பது ஐபிஎல் தொடர் என்றால் மிகை இல்லை. அந்த அளவுக்கு ஐபிஎல் தொடர் குறித்த வரவேற்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிரிக்கெட் ஜாம்பவான்களான சுரேஷ் ரெய்னா, ராபின் உத்தப்பா, கிறிஸ் கெய்ல், அனில் கும்ப்ளே, பார்த்தீவ் படேல் மற்றும் ஸ்காட் ஸ்டைரிஸ் ஆகியோர் ஐபிஎல் வரலாற்றில் தலைசிறந்த வீரர் யார்? மற்றும் சுயநலமற்ற வீரர் யார் என்ற கேள்விக்கு பதில் அளித்து இருக்கின்றனர்.

MS Dhoni most selfless cricketer in IPL history Says cricket legends

Images are subject to © copyright to their respective owners.

இவர்கள் அனைவரும் ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றிலேயே தலைசிறந்த வீரர் மகேந்திர சிங் தோனி தான் என தேர்ந்தெடுத்து இருக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் பேசுகையில் "ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நான்கு முறை தோனி கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் அணிக்கு எப்போதும் ஊக்கம் தரும் வீரர்களில் ஒருவராக அவர் உள்ளார்" என தெரிவித்திருக்கின்றனர்.

அதேபோல, சிறந்த வெளிநாட்டு வீரர்களாக ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் வார்னர் ஆகியோரை இவர்கள் தேர்வு செய்தனர். ஐபிஎல் தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக சுரேஷ் ரெய்னாவின் பெயரை கும்ப்ளே தெரிவிக்க மற்றவர்களும் அதனை வழிமொழிந்தனர்.

MS Dhoni most selfless cricketer in IPL history Says cricket legends

Images are subject to © copyright to their respective owners.

ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் தோனி இதுவரையில் 234 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 4978 ரன்களை அவர் குவித்திருக்கிறார். இதில் 24 அரை சதங்களும் அடங்கும். கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது வரை சிஎஸ்கே அணியின் கேப்டனாக தோனி தொடர்கிறார். மற்ற அணிகளுக்கு கேப்டன்கள் ஒருபுறம் மாறிக்கொண்டே இருக்கையில் தோனி இத்தனை ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார்.

கடந்த ஆண்டு கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிற்கு அவர் வழங்கிய நிலையில் சில போட்டிகளுக்கு ஜடேஜா கேப்டனாக பதவி வகித்தார். பின்னர் அவர் கேப்டன் பொறுப்பை மீண்டும் தோனியிடமே ஒப்படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | அடுத்த 300 வருஷத்துக்கு டேஞ்சர்.. காணாமல்போன கதிரியக்க கேப்ஸ்யூல்.. மொத்த படையையும் இறக்கிய நாடு.. திகிலூட்டும் பின்னணி..!

CRICKET, MS DHONI, SELFLESS CRICKETER, IPL HISTORY, CRICKET LEGENDS

மற்ற செய்திகள்