"மேட்ச் ஜெயிக்குற நேரத்துல.." திடீரென கோபப்பட்ட தோனி.. "எல்லாம் அந்த ஒரு Ball-க்காக தான்.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழி நடத்தி வந்த தோனி, நடப்பு சீசன் ஆரம்பிப்பதற்கு கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.

"மேட்ச் ஜெயிக்குற நேரத்துல.." திடீரென கோபப்பட்ட தோனி.. "எல்லாம் அந்த ஒரு Ball-க்காக தான்.."

Also Read | "9 வருசமா வீட்டுக்கே நான் போகல.. ஐபிஎல் முடிஞ்சதும்.." உருக வைத்த 'MI' வீரர்.. "எதுக்காக இவ்ளோ நாள் Waiting??"

அவருக்கு பதிலாக, ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கேவின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார். அவரது தலைமையில், 8 போட்டிகள் ஆடி இருந்த சிஎஸ்கே, இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

இதனையடுத்து, தனது கேப்டன் பதவியில் இருந்து ஜடேஜா விலகிக் கொள்ள, மீண்டும் சிஎஸ்கேவின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

மீண்டும் கேப்டனான தோனி

தோனியை எப்போது இனி கேப்டனாக பார்ப்போம் என காத்திருந்த ரசிகர்கள், மீண்டும் தோனியை கேப்டனாக கண்டதும் ஆர்ப்பரித்து கொண்டாடினர். தொடர்ந்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியிலும், தோனி தலைமையில் சிஎஸ்கே நேற்று (01.05.2022) களமிறங்கி இருந்தது. இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்திருந்தது.

ms dhoni loses cool after mukesh choudhary wide ball in last over

மூன்றாவது வெற்றி

தொடக்க வீரர்கள் ருத்துராஜ் 99 ரன்களும், டெவான் கான்வே 85 ரன்களும் எடுத்து, நல்லதொரு தொடக்கத்தை அமைத்திருந்தனர். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், சிஎஸ்கே 13 ரன்கள் வித்தியாசத்தில், 3 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

கோபப்பட்ட 'கூல்' கேப்டன்

மீதமுள்ள 5 லீக் போட்டிகளில், அடுத்தடுத்து வெற்றிகளைக் குவித்தால் மட்டுமே சிஎஸ்கே அணிக்கு பிளே ஆப் வாய்ப்பினை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பதும் ஒரு பக்கம் உள்ளது. இந்நிலையில், மீண்டும் சிஎஸ்கே கேப்டனான தோனி, வீரர் ஒருவரிடம் கோபப்பட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

ms dhoni loses cool after mukesh choudhary wide ball in last over

கடைசி ஓவரில், ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை முகேஷ் சவுத்ரி வீசிய நிலையில், ஓவரை எதிர்கொண்ட நிக்கோலஸ் பூரன், 3 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடிக்க, மொத்தம் 24 ரன்கள் அந்த ஓவரில் சேர்க்கப்பட்டது. இதனிடையே, லெக் சைடு பகுதியில் வைடு பால் ஒன்றை வீசினார் சவுத்ரி. அப்போது, தனது நிதானத்தை இழந்த தோனி, ஆப் சைடு பக்கம் பீல்டர்களை செட் செய்துள்ளதாக கோபத்தில் முகேஷிடம் சைகை காட்டினார். ஒரு வேளை, அவர் ஆப் சைடு பக்கம் பந்து வீசி இருக்கலாம் என்பதை தோனி குறிப்பிடுவதாக தெரிகிறது.

ms dhoni loses cool after mukesh choudhary wide ball in last over

ஸ்பெஷலா ஏதும் சொல்லல..

தொடர்ந்து, போட்டிக்கு பின்னர் பேசி இருந்த தோனி, முகேஷ் சவுத்ரியின் பந்து வீச்சு பற்றி, பாராட்டி கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதே போல, கடைசி ஓவர் பற்றி பேசிய முகேஷ் சவுத்ரி, "அந்த ஓவரில் தோனி என்னிடம் எதுவும் ஸ்பெஷலாக கூறவில்லை. ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனில் வீசுமாறு என்னிடம் கூறி இருந்தார். வேறு எதுவும் வித்தியாசமாக முயற்சி செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்" என தெரிவித்தார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

CRICKET, CSK, MSDHONI, MUKESH CHOUDHARY, WIDE BALL, தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ், முகேஷ் சவுத்ரி

மற்ற செய்திகள்