இன்னும் ஐபிஎல் ஆரம்பிக்கவே இல்ல.. அதுக்குள்ள ‘வேறலெவல்’ சம்பவம் பண்ணிய சிஎஸ்கே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் தாய் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸை விட அதிகமான சந்தை மூலதனத்தை கொண்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. அதற்கு முன்னாதாக பெங்களூருவில் கிரிக்கெட் வீரர்களுக்கான மெகா ஐபிஎல் ஏலம் நடைபெற உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் பெங்களூருவில் இந்த ஏலம் நடைபெறும் என தெரிகிறது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நாட்டின் முதல் விளையாட்டு ‘யூனிகார்ன்’ என்ற பெருமையை பெற்றுள்ளது. அதன் தாய் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் சந்தை மதிப்பையும் சிஎஸ்கே தாண்டியுள்ளது.
இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. அது, தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி கடந்த 2021-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மற்றொன்று இந்த ஆண்டு முதல் லக்னோ மற்றும் அகமதாபாத் என்ற இரு அணிகள் இணைய உள்ளன.
அதில் சஞ்சீவ் கோயங்கா தலைமையிலான ஆர்பிஎஸ்ஜி குழுமம் லக்னோ அணியை ரூ.7090 கோடிக்கு வாங்கியுள்ளது. அதேபோல் அகமதாபாத் அணியை சிவிசி கேபிடல் ரூ.5625 கோடிக்கு வாங்கியுள்ளது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் உரிமையாளரும், இந்திய சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குநருமான என். சீனிவாசன் இதுகுறித்து பேசியுள்ளார். அதில், ‘சிஎஸ்கே பிராண்ட் இந்தியா சிமெண்ட்ஸையும் கடந்து விஞ்சி விட்டது. அமெரிக்காவில் தனியார் லீக்குகளின் வரலாற்றைப் பார்த்தால், அது எல்லாவற்றையும் மிஞ்சுவதாக இருக்கும். ஆனால் இந்தியாவில் கிரிக்கெட் மீதான மோகம் அதிகம்’ என என். சீனிவாசன் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படாமல் இருந்ததும் சிஎஸ்கே பிராண்டிற்கு முக்கிய காரணம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்