‘தோனி எனக்கு கடவுள் மாதிரி’!.. ஏன் ரிஷப் பந்த் இப்படி சொன்னார்..? KKR வீரர் பகிர்ந்த ‘சுவாரஸ்ய’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தோனி குறித்து ரிஷப் பந்த கூறிய உருக்கமான தகவலை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் நிதிஷ் ரானா பகிர்ந்துள்ளார்.

‘தோனி எனக்கு கடவுள் மாதிரி’!.. ஏன் ரிஷப் பந்த் இப்படி சொன்னார்..? KKR வீரர் பகிர்ந்த ‘சுவாரஸ்ய’ தகவல்..!

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (KKR) அணியின் சார்பாக விளையாடி வருபவர் இளம்வீரர் நிதிஷ் ரானா. இவரும், இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்தும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் பலரும் தன்னை ஒப்பிடுவது குறித்து நிதிஷ் ரானாவிடம் ரிஷப் பந்த் பகிர்ந்துள்ளார்.

MS Dhoni is like a God to Rishabh Pant, said Nitish Rana

இதுகுறித்து இந்தியா டிவி சேனலில் பேட்டியளித்தபோது நிதிஷ் ரானா தெரிவித்துள்ளார். அதில், ‘ரிஷப் பந்த் தோனியை மிகவும் வியந்து பார்ப்பவர். அவர் தூங்கி கண் விழிக்கும்போது பார்க்கும் முதல் நபராக தோனி இருக்க வேண்டும் என விரும்புவார். இதுகுறித்து என்னிடம் பலமுறை கூறியிருக்கிறார்.

MS Dhoni is like a God to Rishabh Pant, said Nitish Rana

அதேபோல் தோனியுடன் தன்னை ஒப்பிடுவது சரியல்ல என்றும், தான் அதற்கு தகுதியானவன் இல்லை என்றும் கூறினார். ஏனென்றால், தோனி தனக்கு கடவுள் போன்றவர் என்று ரிஷப் பந்த் கூறினார்’ என நிதிஷ் ரானா தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியை, தனது ‘குரு’ என பல இடங்களில் ரிஷப் பந்த் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

MS Dhoni is like a God to Rishabh Pant, said Nitish Rana

தொடர்ந்து பேசிய நிதிஷ் ரானா, ‘ரிஷப் பந்தின் மிகப்பெரிய பலம் அவருடைய தன்னம்பிக்கைதான். எந்த பார்மெட்டில் விளையாடினாலும் அவருடைய ஆட்டத்தை அவர் கைவிடுவதில்லை. அவர் மீது விமர்சனம் எழுந்தபோது மிகவும் பொறுமையாக இருந்தார். இந்தியாவின் வெற்றிக்காக நான் ஒரு இன்னிங்ஸ் விளையாடுவேன், அது என் வாழ்க்கையை மாற்றும் என்று ஒருமுறை என்னிடம் கூறினார். அதனை 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திலேயே ரிஷப் பந்த் செய்து காட்டினார். அதுதான் ரிஷப் பந்தின் பலம்.

MS Dhoni is like a God to Rishabh Pant, said Nitish Rana

அந்த தொடரில் சதம் அடித்துவிட்டு ரிஷப் பந்த் என்னிடம் பேசினார். அப்போது சில மீம்ஸ்களை காட்டினார். அந்த மீம்ஸ்கள் அனைத்தும் ரிஷப் பந்தை பாராட்டி இருந்தன. நாம் நன்றாக விளையாடி சாதித்தால் மக்களின் மனநிலை ஒரே நாளில் மாறிவிடும் என கூறினார்’ என்று ரிஷப் பந்த் குறித்த சுவாரஸ்ய தகவல்களை நிதிஷ் ரானா பகிர்ந்துள்ளார்.

மற்ற செய்திகள்